பாகுபலி 2 பீவர் இப்போது படத்தை பார்த்த ரசிகர்களுக்கு குறைந்திருக்கும். படமும் அமோகமான விமர்சனத்தை பெற்று வருகிறது, அதோடு பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கி வருகிறது.

இந்நிலையில் எப்போதாவது படங்களை பார்க்கும் கேப்டன் விஜயகாந்த் முதல் நாளே பாகுபலி 2 படத்தை பார்த்திருக்கிறார்.

சென்னையில் ப்ரிவியூ காட்சி திரையிட்ட போது நடிகர் விஜயகாந்த் படத்தை பார்த்திருக்கிறார். நிறைய பிரபலங்கள் முதல் நாள் படத்தை பார்த்திருக்கிறார்கள், ஆனால் விஜய்காந்த் பார்த்தது இதுவே முதன்முறை.