Connect with us

Cinemapettai

மெர்சலில் மற்றொரு விஜய்யாக நடித்தது இவர்தான் உங்களுக்கு தெரியுமா..?

mersal vijay

Cinema News | சினிமா செய்திகள்

மெர்சலில் மற்றொரு விஜய்யாக நடித்தது இவர்தான் உங்களுக்கு தெரியுமா..?

ஒரு படத்தில் அரசியல் வசனம் இருந்தால் அதில் இருந்து கிளம்பும் சர்ச்சைகளே அந்தப் படத்தை ஜாக்பாட் வசூல் குவிக்க உதவும் என்பதற்கு சான்றாகி இருக்கிறது மெர்சல் திரைப்படம்.

ஒரு வாரத்தில் மட்டுமே அந்த திரைப்படம் உலக அளவில் ரூ. 170 கோடி அள்ளி வசூலில் சாதனை படைத்துள்ளது. ஒரு திரைப்படம் எப்படி அதிகம் பேரால் பேசப்படும் என்பதற்கு அதில் தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப வசனங்களை வைத்தாலே போதுமானது.

mersal

அதிலும் அரசியல் தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அந்தப் படத்திற்கு விளம்பரமே தேவையில்லை. மெர்சல் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான தேனான்டாள் பிலிம்ஸ் அதை உணர்ந்திருக்கும்.

ரூ. 80 கோடி பட்ஜெட்டில் மெர்சல் படம் திட்டமிடப்பட்டு அது ரூ. 130 கோடி வரை எட்டியதால் போட்ட பணம் கிடைக்குமா என்று களக்கத்தில் இருந்தனர் தயாரிப்பு நிறுவனத்தினர்.ஆனால் அதையும் தாண்டி வசூல் குவித்து வருகிறது.

mersal

மெர்சல் படம் பல சர்ச்சைகளைத் தாண்டி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது அந்தப் படம் இந்தநிலையில் மெர்சல் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது அந்தப்படத்தில் மொத்தம் மூன்று விஜய் நடித்து இருக்கிறார்கள். ஒருவர் ஃபிளாஸ்பேக்கில் நடித்ததால் விஜய்யே அதில் நேரடியாக நடித்தார். ஆனால் மற்ற இரு விஜய் கேரக்டர்களும் அடிக்கடி சந்தித்துக்கொள்வது போலக் காட்சிகள் இருந்ததால் ஒருவர் மட்டுமே அதில் நடிக்க முடியும்.

mersal movie review

mersal vijay

இன்னொருவர் விஜய்க்கு பதிலாக அதில் டூப் போட்டு நடித்து அந்த இடத்தை நிரப்பி பின்னர் டூப்புக்கு பதிலாக திரும்ப அந்தக்காட்சிகளுக்கு விஜய் வந்து நடித்து அதை பின்னர் படமாக்குவார்கள்.

டபுள் ஆக்‌ஷன் கதை நடிக்கின்றவர்களில் பலர் இப்படித்தான் நடிப்பார்கள்.இதில் என்ன விஷயம் என்றால் விஜய்க்கு பதிலாக அந்த கேரக்டரில் யார் நடித்தது என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.

atlee

அதாவது இயக்குநர் அட்லீதான் இன்னொரு விஜய்யாக நடித்துக்கொடுத்தாராம்.ஒளிப்பதிவாளர் விஷ்ணு இதைத் தெரிவித்து இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top