Tamil Cinema News | சினிமா செய்திகள்
பட வாய்ப்புக்காக தயாரிப்பாளர் காலில் விழுந்தாரா பிரபல நடிகை?
சென்னை: மார்க்கெட் டல்லடித்துள்ள அந்த இளம் நடிகை பட வாய்ப்புக்காக தயாரிப்பாளரின் காலில் விழுந்ததாக பேச்சாக கிடக்கிறது.
கோலிவுட், டோலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்த இளம் நடிகைக்கு தற்போது மார்க்கெட் சரியில்லை. அவர் பெரிதும் எதிர்பார்த்த படம் ஓடிவிட்டது ஆனால் அவருக்கு தான் புதுப்பட வாய்ப்புகள் வருவதாக இல்லை.
இந்நிலையில் தமிழ் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அம்மணிக்கு. அவர் கூடுதல் சம்பளம் கேட்டு கறாராக பேசினாராம். மார்க்கெட் இல்லாத நேரத்தில் இவ்வளவு சம்பளமா என்று யோசித்த தயாரிப்பாளர் நடிகையை படத்தை விட்டு நீக்கினாராம்.
பின்னர் என்ன நினைத்தாரோ நடிகை தயாரிப்பாளரை சந்தித்து நான் அப்படி பேசியிருக்கக் கூடாது என்று கூறி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.
நடிகையின் நிலைமை இப்படியாகிப்போச்சே என்று அவரது நட்பு வட்டாரம் ஃபீல் பண்ணுகிறதாம்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
