புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

நான் தாய்மை அடைவது மிகவும் தாமதமாகவில்லை.. இரண்டாவது திருமணத்திற்கு ஹிண்ட் கொடுத்த சமந்தா

Samantha: நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாக்களில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர். சென்னை பல்லாவரத்தில் பிறந்து, மாடலிங் துறையை தேர்ந்தெடுத்து அதன் பின்னர் டிவி விளம்பரம், தமிழ் பட வாய்ப்பு, தெலுங்கு பட வாய்ப்பு என படிப்படியாக வளர்ந்தார்.

நீதானே என் பொன்வசந்தம் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் பொழுது தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய குடும்பமான நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யாவை காதலிக்க தொடங்கினார். நீண்ட வருட காதலுக்கு பிறகு இந்த இருவருக்கும் திருமணம் நடந்து ஒரு சில வருடங்களில் விவாகரத்தில் முடிந்து விட்டது.

ஹிண்ட் கொடுத்த சமந்தா

விவாகரத்துக்கு பிறகு உண்மையிலேயே சமந்தா தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி மார்க்கெட்டில் உச்சத்தில் இருந்தார். அந்த சமயத்தில் தான் அவருக்கு மையோசைட்டிஸ் என்னும் நோய் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து சிகிச்சைகளுக்காக நேரம் ஒதுக்கி அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறார். இதனால் தற்போது அவருடைய சினிமா கேரியர் கொஞ்சம் இறங்கு முகமாகத் தான் இருக்கிறது. அவருடைய முன்னாள் கணவர் நாக சைதன்யா, சக நடிகை சோபிதாவை வரும் டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் செய்ய இருக்கிறார்.

இதற்கும் சமந்தா பெரிதாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் தனக்கு ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருப்பதாக சமீபத்தில் சொல்லி இருக்கிறார். எல்லோரும் என்னுடைய வயது பெரிதாக பேசுகிறார்கள், ஆனால் தாய்மை அடைவதற்கு வயது ஒரு தடை இல்லை. நான் தாய்மை அடைவது ரொம்ப காலதாமதமாகவும் ஆகிவிடவில்லை.

ஒரு குழந்தைக்கு தாயாக இருப்பதையே நான் ரொம்பவும் விரும்புகிறேன் என சமந்தா சொல்லி இருக்கிறார். குழந்தை மீது விருப்பம் இருப்பதாக தெரிவித்திருப்பதால் கண்டிப்பாக சமந்தா இரண்டாவது திருமணம் செய்து கொள்வார் என அவருடைய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

Trending News