நடிகை சமந்தா அட்லீ இயக்கத்தில் விஜயுடன் தெறி படத்தில் நடித்திருந்தார். இந்த ஜோடிக்கு நிறைய வரவேற்ப்பு இருந்தது. டூயட் பாடலும் ரசிக்கும் படியாக இருந்தது.

இதை தொடர்ந்து அவர் மீண்டும் விஜய்யுடன் விஜய் 61 படத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே திருமண நிச்சயமாகியிருக்கும் சமந்தா விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார்.

தற்போது நடித்து வரும் படங்களில் கிளாமர், ரொமான்ஸை குறைத்து வரும் அவர் இந்த படத்தில் எந்த விதமான கண்டிசனும் இல்லாமல் கதையில் நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம்.

இவர்கள் சம்மந்தப்பட்ட காட்சிகள் வரும் ஜூன் மாதம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.