Jai : திருமண புகைப்படத்தை வெளியிட்ட ஜெய்.. ஹனிமூன் டிக்கெட்டுடன் கிளம்பிய போட்டோ 

விஜய்க்கு தம்பியாக பகவதி படத்தில் நடித்தவர் தான் ஜெய். இவரது கேரியரில் திருப்புமுனையாக அமைந்த படம் சுப்பிரமணியபுரம்‌‌. ஆனால் அதன் பிறகு ஜெய் நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.

அட்லி இயக்கத்தில் உருவான ராஜா ராணி படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். ஆனாலும் அதன்பிறகு கதை தேர்வில் சொதப்பியதால் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாமல் போய்விட்டது. இப்போதும் சில படங்களில் நடித்து வந்தாலும் பெரிய அளவில் எதுவும் கை கொடுக்கவில்லை.

நடிகை பிரத்யாவுடன் ஜெய்

jai-pragya
jai-pragya

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெய் போட்ட புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகி இருந்தது. ஆரம்பத்தில் நடிகை அஞ்சலி உடன் ரிலேஷன்ஷிப்பில் ஜெய் இருந்தார். இவர்களுக்குள் மன கசப்பு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து விட்டனர்.

ஜெய் வெளியிட்ட புகைப்படத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி

இந்த சூழலில் தற்போது நடிகை பிரக்யா நாக்ரா தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படம் ஒன்று வெளியிட்டு இருக்கிறார். புது தாலியுடன் அருகில் ஜெய் இருக்கும் நிலையில் கையில் பாஸ்போர்ட் இருக்கிறது. அதோடு கடவுளின் ஆசியோடு புது வாழ்வு தொடங்கி உள்ளதாகவும் பதிவிட்டு இருக்கிறார்.

இதைப் பார்த்த நிலையில் கமுக்கமாக ஜெய் திருமணத்தை முடித்துள்ளாரா என்று பலருக்கும் ஆச்சரியம் பட்டுள்ளனர். அதாவது இந்த புகைப்படத்திற்கு பின்னால் கேமரா இருக்கிறது. அதோடு இவர்கள் இருவரும் பேபி அண்ட் பேபி என்ற படத்தில் நடித்து வருகிறார்கள்.

ஆகையால் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் பிரக்யா பதிவிட்டு இருக்கிறார். எனவே ஜெயிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றுதான் தகவல் வெளியாகி இருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →