ஹீரோவுக்கு 233 கோடி, ஹீரோயினுக்கு 186 கோடி சம்பளம்.. OTT படத்துக்கு அள்ளிக் குவிக்கும் ஜோடி

உலகம் முழுவதும் திரையரங்குகள் திறப்பதில் பல இடங்களில் சிக்கல்கள் நிலவி வருவதால் தற்போது எங்கு படம் எடுத்தாலும் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட்டு கல்லா கட்டி வருகின்றனர்.

எடுத்து முடித்த படத்தை கையில் வைத்துக் கொண்டிருந்தால் வட்டி மேல் வட்டி ஏறி அது ஒரு பக்கம் பஞ்சாயத்து, அதோடு எவனாவது படத்தை திருட்டுத்தனமாக எடுத்து வெளியிட்டு விடுவானோ என்ற ஒரு பயம்.

இதற்கு மத்தியில் பேசாமல் வருகிற விலைக்கு ஓடிடிக்கு கொடுத்து நஷ்டம் இல்லாமல் தப்பித்துக் கொள்ளலாம் என தயாரிப்பாளர்கள் பலரும் தற்போது ஓடிடியிடம் படம் கொடுப்பதையே பெரிதும் விரும்புகின்றனர்.

மேலும் உலகத்தில் பிரபலமான OTT நிறுவனங்களாக இருக்கும் பலரும் சொந்தமாகவே படங்களை எடுத்து தங்களது ஓடிடி தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அதில் நெட்ப்ளிக்ஸ் அமேசான் போன்றோர் நமக்கு தெரிந்தவை. இதோடு உலகம் முழுவதும் பல ஓடிடி தளங்கள் உள்ளன.

அந்த வகையில் ஹாலிவுட் புகழ் நடிகர் லியார்னாடோ டிகாப்ரியோ நடிக்கும் புதிய படம் ஒன்று நேரடியாக OTT தளத்திற்கு என்றே உருவாக உள்ளது. இந்த படத்திற்கு டோண்ட் லுக் அப் என பெயர் வைத்துள்ளனர்.

இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கும் டிகாப்பிரியாவுக்கு சுமார் 233 கோடி சம்பளம் கொடுக்கப்பட உள்ளது. அதேபோல் அவருக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸுக்கு 186 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. ஆடம் மெக்கே என்பவர் இயக்கியுள்ள இந்த படம் வருகின்ற டிசம்பர் மாதம் திரைக்கு வரும் என தெரிகிறது.

dicaprio-jenifer-lawrance-cinemapettai
dicaprio-jenifer-lawrance-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்