fbpx
Connect with us

Cinemapettai

துருவ் விக்ரம் நடிக்கும் அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீ-மேக் பட டைட்டில் இது தான்.

News | செய்திகள்

துருவ் விக்ரம் நடிக்கும் அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீ-மேக் பட டைட்டில் இது தான்.

பாலா இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிக்கும் படத்திற்கு “வர்மா” என்று பெயர் வைத்துள்ளார் சீயான் விக்ரம். தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்டர் ஒன்றையும் நேற்று மாலை ரிலீஸ் செய்தார்.

அர்ஜுன் ரெட்டி

விஜய் தேவர்கொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் தெலுங்கு சினிமாவையே புரட்டிப்போட்ட படம் தான் அர்ஜுன் ரெட்டி. மருத்துவக் கல்லூரியில் சீனியர், ஜூனியர் இடையே நடக்கும் லவ் ஸ்டோரி. காதல், காமெடி, ரொமான்ஸ், பிரேக்-அப், என்று பல பரிமாணங்களை இந்தப்படத்தில் அழகாக சித்தரித்து இருந்தார் இயக்குனர் சந்தீப் வாங்கா ரெட்டி.இப்படத்தின் தமிழ் ரீ-மேக்கில் நடிக்கப்போவது நம்ப சீயான் விக்ரம் மகன் துருவ்.

வர்மா தி மூவி

மிகவிரைவில் இப்படக்குழு ஷூட்டிங்க்கு செல்லவிருக்கிறது. அதற்கு முன் படத்தோட தலைப்பை அறிவிக்க வேண்டும் என்று இருந்தனர். வியாழன் மாலை இப்படத்தின் தலைப்பு வெளிவருவதாக இருந்தது. எனினும் சாமி 2 ஒளிப்பதிவாளர் ப்ரியனின் எதிர்பாராத உயிர் இழப்பால், மரியாதையை நிமித்தமாக விக்ரம் தலைப்பு அறிவிப்பதை தள்ளிவைத்தார்.

நேற்று மாலை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் டைட்டில் மற்றும் படத்தின் முதல் லுக் போஸ்டர் போன்ற ஒன்றை வெளியிட்டார் சீனியர் விக்ரம்.
துருவ் விக்ரம்

தன் முதல் படத்துக்காக பல ஸ்கிரிப்டுகள் கேட்ட துருவ்; எது என்று முடிவு பண்ணாமல் இருந்தாராம். இந்நிலையில் தான் அவர் அர்ஜுன் ரெட்டி படம் பார்த்துள்ளார். அவருக்கு மிகவும் பிடித்து போக, இதையே தன்  முதல் படமாக நடிக்க முடிவு எடுத்தாராம்.

Dhuruv Vikram spotted in his new look in sister Akshitha’s marriage

இயக்குனர் பாலா

விக்ரமிற்கு சினிமா துறையில் நிரந்தர அங்கீகாரம் கிடைக்க காரணமாக இருந்தது இயக்குனர் பாலாவின் சேது திரைப்படம் தான். தன் மகனின் முதல் படம் பாலா எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து அவரிடம் கேட்டுக் கொண்டாராம்.விக்ரம் கேட்டுக் கொண்டதால், மறுப்பு எதுவும் சொல்ல முடியாமல் இவர் ரீ- மேக் படம் எடுக்க ஒப்புக்கொண்டார் பாலா.

இப்படத்தின் இயக்குனர் யார் என்பதையே விக்ரம் தன் இன்ஸ்டாகிராம் வாயிலாக சஸ்பென்ஸ் வைத்து, ஒரு ஒரு எழுத்தாக வெளியிட்டு இறுதியில் பாலா என்று தெரிவித்து பரபரப்பை கூட்டினார்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

தனக்கு அமைந்தது போல் இருக்கக் கூடாது என்று முடிவு செய்தாராம் விக்ரம். அதனால் தான் தன் மகனின் அறிமுகப் படத்திற்காக இவ்வளவு மெனக்கெட்டு மார்க்கெட்டிங் செய்கிறார் விக்ரம் என்று கிசு கிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா?

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top