fbpx
Connect with us

Cinemapettai

என்னது.! துருவ நட்சத்திரம் படம் இத்தனை பார்ட் உருவாகிறதா.! மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

News | செய்திகள்

என்னது.! துருவ நட்சத்திரம் படம் இத்தனை பார்ட் உருவாகிறதா.! மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் விக்ரம், அழுத்தமான கதையம்சம் உடைய படங்களில், அடுத்தடுத்து நடித்து வருகிறார்.

விக்ரம் நடிக்கும் ‘ஸ்கெட்ச்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது  இது விக்ரமின் 53-வது படமாகும். இந்தப் படத்தை விஜய் சந்தர் இயக்குகிறார். எஸ்.எஸ்.தமன் படத்துக்கு இசையமைக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

Sketch

தமிழ்த் திரை உலகில் தன்னுடைய இயல்பான நடிப்பாலும், வித்தியாசமான கதாபாத்திரங்களாலும் உச்சத்தை அடைந்தவர் விக்ரம். அவர் கடைசியாக நடித்து வெளிவந்த ‘இருமுகன்’ படம் மிகப் பெரிய வெற்றியை அடைந்தது.

பொதுவாக ஒருபடத்துக்கு இரண்டு ஆண்டுகள் வரை செலவிடும் விக்ரம், இந்த முறை ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்னர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டீசர் வெளியானது.இது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

vikram

ஸ்கெட்ச் படத்துக்கு பின், கவுதம் மேனன் இயக்கத்தில், துருவ நட்சத்திரம் படம், அதிரடியாக தயாராகி வருகிறது. சர்வதேச அளவில், பிரபலமான துப்பறியும் நிபுணராக, இந்த படத்தில் நடிக்கிறார்,

விக்ரம். கவுதம் மேனன் படம் என்றாலே, போலீஸ், துப்பறியும் நிபுணர் ஆகியவற்றுக்கு, முக்கியத்துவம் இருக்கும்.

இதுவும், அதுபோன்ற படம் என்றாலும், தன் முந்தைய படங்களில் இடம்பெறாத பல அம்சங்கள் இதில் இடம் பெறும் என்கிறார், கவுதம் மேனன். இந்த படத்தில், விக்ரமுக்கு, ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா என, இரண்டு ஹீரோயின்கள்.

sketch movie

மேலும், இந்த படம் மூன்று பாகங்களாக தயாராகவுள்ளது என்ற தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும் விக்ரம் பற்றி இதையும் படிங்க.

‘சீயான் விக்ரம்’ என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர், நடிகர் விக்ரம் அவர்கள். நடிப்பில் எந்தவொரு முன்னனுபவமும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் 1990 ஆம் ஆண்டில் கால்பதித்த அவர், படிப்படியாகத் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி எனப் பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.

Dhruva-Natchathiram

‘தேசிய விருது’, ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது’, ‘6 முறை ஃபிலிம்ஃபேர் விருது’, ‘தமிழ்நாடு மாநிலப் திரைப்பட விருது’, ‘3 முறை விஜய் விருது’, சினிமா எக்ஸ்பிரஸ் விருது’, ‘அம்ரிதா பட விருது’, ‘சர்வதேச தமிழ்ப் பட விருது’, ‘விகடன் விருது’ எனப் பல்வேறு விருதுகளை வென்று, ‘பீப்புள்’ஸ் யுனிவெர்சிட்டி ஆஃப் மிலன்’ல் இருந்து ‘கௌரவ டாக்டர் பட்டத்தையும்’ வென்றார்.

ஒரு நடிகராகத் திரையுலகில் நுழைந்த அவர், பின்னணிப் பாடகராகவும், டப்பிங் கலைஞராகவும், தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார்.

இப்பொழுது வரும் படமும் மாபெரும் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top