Connect with us
Cinemapettai

Cinemapettai

போட்டோவுடன் தன் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட துருவ் விக்ரம்! தயாரிப்பாளர் யாராக இருக்கும்

dhruv vikram

Tamil Cinema News | சினிமா செய்திகள்

போட்டோவுடன் தன் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட துருவ் விக்ரம்! தயாரிப்பாளர் யாராக இருக்கும்

வாரிசுகளை சினிமாவில் நுழைப்பதும் நம் இந்தியாவில் ஒன்றும் புதிய விஷயம் அல்ல. தானே தன் மகனை ஹீரோவாக்கி படத்தை இயக்கிய தந்தைகளும் இங்குண்டு.

ஆனால் மகன் ஆசைப்பட தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டியை மகனின் முதல் படமாக்க முற்பட்டார் சீயான். அதன் பின் நடந்த விஷயங்கள் அனைத்தும் கோலிவுட் முழுக்க அறிந்த சமாச்சாரம் தான். வர்மா படத்தில் துருவ் விக்ரம் நடிப்பு அனைவரது பாராட்டையும் பெற்றது. அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், விக்ரம் மற்றும் துருவ் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு வந்தது. எனினும் எப்போ ஷூட்டிங் என்பது தெரியவில்லை.

மேலும் இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் பரியேறும் பெருமாள், கர்ணன் இயக்குனர் மாரி செல்வராஜ் கூட்டணியில் ஸ்போர்ட்ஸ் பிலிம் நடிக்கப்போவதாகவும் கிசு கிசுக்கப்பட்டது. எனினும் இருதரப்பும் ஆமோதிக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. இந்நிலையில் நேற்று மாரி செல்வராஜ் அவர்களுடன் இருக்கும் போட்டோவை துருவ் தன் இன்ஸ்டாக்ராம்மில் பதிவிட்டு, தன் அடுத்த படத்தை உறுதி செய்துள்ளார்.

dhruv vikrams next

எனினும் தயாரிப்பாளர் யார் என்பதனை பற்றி எதுவும் சொல்லவில்லை. பா ரஞ்சித் தயாரிக்க இருந்து ப்ரொஜெக்ட் தான் இது, எனினும் இப்பொழுது கலைப்புலி தாணு அவர்கள் வசம் சென்றுவிட்டதாகவும் ஒரு சிலர் சொல்கின்றனர். அதற்கு காரணம் ரஞ்சித் தயாரிக்கும் பட்சத்தில் படம் ஒரு குறிப்பட்ட சமூகத்தை பற்றி பேசும் படம், என முத்திரை குத்திவிடுவார்களோ என விக்ரம் யோசிக்கிறார் என்கின்றனர்.

விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் பட்சத்தில் நமக்கு தெரிந்துவிடும். காத்திருப்போம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top