புலிக்கு பிறந்தது பூனையாகுமா? துருவ் விக்ரம் செய்யும் அட்டகாசம்

விக்ரம் தமிழ் சினிமாவின் ஒரு சாம்ராஜ்யம் என்றே கூறலாம். தனக்கென்று ஒரு கெத்தான நடிப்பு பலதரப்பட்ட ரசிகர்களை கையில் கொண்டுள்ளவர். புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா என்பதை போன்று தற்போது  துருவ் விக்ரம் கோயமுத்தூர் காலேஜில் நேருக்கு நேராக பாடியுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

இவர் நடிப்பில் வெளிவர காத்துக்கொண்டிருக்கும் ‘ஆதித்ய வர்மா’ திரைப்படம் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சாமி படத்தின் வசனத்தை பேசியது மட்டுமல்லாமல் அவர்  ஒரு பாடலை பாடியும் உள்ளார்.

இதனைக் கேட்டு ரசிகர்கள் ஆரவாரத்தில் கைதட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். விக்ரம் போலவே முதல் படத்திலேயே தனது திறமையான நடிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படம் அவருக்கு கண்டிப்பாக வெற்றி கொடுக்கும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment