Tamil Cinema News | சினிமா செய்திகள்
விக்ரம் கை காமித்த இயக்குனர்.. கெட்டியாக பிடித்துக்கொண்ட துருவ்
ஆதித்ய வர்மா படத்தின் மூலம் அறிமுகமான துருவ் விக்ரம் தற்போது தனது அடுத்த படத்தின் கதைகளை இயக்குனர்களிடம் கேட்டு ஒருவழியாக தேர்வு செய்துவிட்டாராம்.
விஜய் தேவர கொண்டா நடித்திருந்த கடினமான கதாபாத்திரத்தின் ரீமேக்கில் ‘ஆதித்ய வர்மா’ படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பு பெற்றது அது மட்டுமல்லாமல் அதிக அளவில் விளம்பரம் செய்யப்பட்ட படம் என்றே கூறலாம். விக்ரம் தமிழ்சினிமாவில் பெற்ற அங்கிகாரத்தை தன் மகனுக்கும் கிடைக்க வேண்டுமென்று போராடிக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தற்போது துருவ் விக்ரம் மற்றும் மாரி செல்வராஜ் இணைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
அந்தப் படத்தின் வெற்றியை வைத்து தான் தனுஷுடன் கர்ணன் படத்தை இணைவதற்கான வாய்ப்பு கிடைத்தது. கர்ணன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதால். இந்தப் படம் முடிந்தவுடன் துருவ் விக்ரமுடன் இணையும் அடுத்த படத்தின் செய்திகள் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தன் மகனின் படத்திற்காக கதை தேர்வு செய்வதில் விக்ரம் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறாராம். தந்தைக்கு நிகராக வர முடியாது என்றாலும் அவரது பெயரை காப்பாற்றுவேன் என்று துருவ் விக்ரம் ஒரு பேட்டியில் கூறியிருப்பார்.
