Tamil Cinema News | சினிமா செய்திகள்
விக்ரம் மகனுக்கு குவியும் பட வாய்ப்புகள்.. ஆனால் ஒரு சிக்கல்
விக்ரம் மகன் துருவ் விக்ரம் தற்பொழுது நடித்துக்கொண்டிருக்கும் ஆதித்யா வர்மா திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் ஒன்றரை ஆண்டுகளாக இந்த படம் எப்போ வரும் என்று விக்ரம் ரசிகர்களிடம்எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
அதற்குள் பல தயாரிப்பாளர்களும், ஒரு சில முன்னணி இயக்குனர்களும், சில உதவி இயக்குனர்களும் விக்ரம் மகனை வைத்து படம் எடுக்க தயாராக உள்ளனர். ஆனால் விக்ரமும் ஆதித்ய வர்மா வந்த பிறகுதான் அந்தப் படத்தின் ரிசல்ட்டை பார்த்துவிட்டு மற்ற படங்களில் ஒப்பந்தம் செய்வார் என சொல்லப்படுகிறது.
இருந்தாலும் பல இயக்குனர்கள் விக்ரமை சந்தித்து தன்னுடைய மகனுக்கு கதையைக் கேட்டுக் கொண்டே இருக்கிறார். அவர்களுக்கு இதுவரை விக்ரம் எந்த முடிவையும் சொல்லவில்லை. சில தயாரிப்பாளர்கள் துருவ் விக்ரமின் கால்ஷீட்டை கொடுங்கள் என அலைந்து கொண்டே இருக்கிறார்கள்.
இன்னும் ஒரு படம் கூட ரிலீசாகவில்லை. அதற்குள் பல இயக்குனர்கள் பல தயாரிப்பாளர்கள் விக்ரம் வீட்டு கதவை தட்டி கொண்டே இருக்கிறார்கள். எல்லாத்துக்கும் பதில் ஆதித்யா வர்மா முடிவை பொறுத்துதான் உள்ளது.
