fbpx
Connect with us

Cinemapettai

பீமா பட விக்ரம் போல் மாறிய துருவ் விக்ரம்.. அப்பா 8 அடி பாஞ்சா புள்ள 16 அடி பாய்வாரு போல!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பீமா பட விக்ரம் போல் மாறிய துருவ் விக்ரம்.. அப்பா 8 அடி பாஞ்சா புள்ள 16 அடி பாய்வாரு போல!

சினிமாவில் கதாபாத்திரத்திற்கு தகுந்த மாதிரி உடல் எடையை ஏற்றி இறக்கி நடிக்கும் நடிகர்களில் மிக முக்கியமானவர் சியான் விக்ரம். ஒரு படத்தின் வெற்றிக்காக கடுமையாக உழைப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக விக்ரமின் படங்கள் எதுவுமே மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக விக்ரம் 7 கெட்டப்புகளில் நடித்துள்ள கோப்ரா படத்தையே பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.

அதேபோல் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் சினிமாவில் ஹீரோவாக நடிக்க வந்துவிட்டார். ஆதித்யா வர்மா படம் தோல்வியடைந்தாலும் அவரது நடிப்புக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.

அந்த வகையில் அடுத்ததாக விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் சீயான்60 படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இதனை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ லலித்குமார் தயாரிக்கவுள்ளார்.

இந்நிலையில் அந்த படத்துக்காக வெறித்தனமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் கூட்டி வருகிறார் துருவ் விக்ரம். பீமா பட விக்ரம் போல் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது இணையதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகின்றன.

dhruv-vikram

dhruv-vikram

Continue Reading
To Top