Connect with us

Cinemapettai

பா.ரஞ்சித் அசத்தலான கூட்டணியில் துருவ் விக்ரம்.. விக்ரமின் மாஸ்டர் பிளான் நிறைவேறுமா.?

dhruv vikram

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பா.ரஞ்சித் அசத்தலான கூட்டணியில் துருவ் விக்ரம்.. விக்ரமின் மாஸ்டர் பிளான் நிறைவேறுமா.?

கதாபாத்திரத்துக்காக தனது தோற்றத்தையே மாற்றும் நடிகர்களில் முக்கியமானவர் விக்ரம் என்றே கூறலாம். அதே போல் தனது மகன் துருவ் விக்ரமை கொண்டு வந்துவிட வேண்டும் என்பதே அவரின் முக்கியமான எதிர்பார்ப்பாக தெரிகிறது.

விக்ரமின் ஆஸ்தான இயக்குனரான பாலாவின் வர்மா படத்தில் அறிமுகமாக இருந்தது ஆனால் பல பிரச்சினைகளுக்கு இடையே அந்த படம் சற்று தாமதமானது. ஆனால் இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெறாத ஒரே காரணத்தால் மற்றொரு புதிய இயக்குனரை வைத்து ஆதித்யா வர்மா எனும் பெயரின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இவர் புதிதாக நடிக்க உள்ள திரைப்படத்தைப் பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது. தனுஷ் நடிப்பில் தாணு தயாரிப்பில் உருவாகி வரும் கர்ணன் திரைப்படத்தை இயக்கிய மாரிசெல்வராஜ் தான் துருவ்விக்ரமை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படம் முழுவதுமாக விளையாட்டை மையப்படுத்தி எடுக்க உள்ளதாக அப்படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Mari Selvaraj

மாரி செல்வராஜ் முதல் படமான பரியேறும் பெருமாள் படத்தை தயாரித்தவர் பா ரஞ்சித் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது இவர்கள் இருவரும் இணைந்து மற்றொரு படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஒருபக்கம் மாரிசெல்வராஜ் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தாலும், மற்றொரு பக்கம் துருவ் விக்ரமின் ரசிகர்களுக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே தான் இருக்கும்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top