ஆதித்யா வர்மா படத்தில் புது ஜோடி.. துருவ் விக்ரம், பனிதா சந்து வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் பல நடிகர்களின் வாரிசுகள் தற்போது நடிகர்கள் அவதாரம் எடுத்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது இடம் பிடித்து உள்ளவர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். இவர் நடிப்பில் தற்போது உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் ஆதித்யா வர்மா.

இந்த படத்தை ஏற்கனவே பாலா இயக்கி இருந்தார். ஆனால் படக்குழுவினருக்கு அந்த திரைப்படம் திருப்தி அளிக்காத வகையில் மீண்டும் ஒரு புது இயக்குனரை வைத்து முழு படத்தையும் இயக்கி வருகின்றனர். அதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாக உள்ளது என்றே கூறலாம்.

தற்போது விக்ரமுக்கு ஜோடியாக பனிதா சந்து நடித்து வருகிறார். தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் இருவரும் அழகாக உள்ளார்கள் என்று கூறி வருகின்றனர்.

dhruv vikram

dhruv vikram

dhruv vikram
dhruv vikram

Leave a Comment