Connect with us
Cinemapettai

Cinemapettai

Chiyaan-Vikram-Son-Dhruv

Tamil Cinema News | சினிமா செய்திகள்

‘ஆதித்ய வர்மா’ இறுதி கட்ட படப்பிடிப்பு..! துருவனின் முதல் படம் ரிலீஸ் எப்போது?

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் முதல் படம் ஆதித்யா வர்மா. ஆனால் வர்மா என்ற பெயரில் முதலில் பாலா துருவ் விக்ரம்மை வைத்து இயக்கினார் முழு படமும் முடிந்த பிறகு படத்தை பார்த்த படக்குழு, தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை கூறி படத்தை முழுவதுமாக கைவிடுவதாக அறிவித்தனர்.

அதன் பிறகு துருவ விக்ரமை வைத்து மீண்டும் படத்தை எடுக்க படக்குழு திட்டமிட்டது. உதவி இயக்குனராக தெலுங்கு பட இயக்குனர் கிரிஷாயி வைத்து ‘ஆதித்ய வர்மா’ எனும் பெயரில் படத்தை தொடங்கினர். தற்போது படக்குழுவினர் சென்னை மற்றும் மும்பையில் வேகமாக  படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர்.

இன்னும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டி இருக்கும் நிலையில் விரைவில் படப்பிடிப்பை நடத்தி முடித்து வரும் ஜூன் இறுதி அல்லது ஜூலை முதல் வாரத்தில் படம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top