Tamil Cinema News | சினிமா செய்திகள்
தூள் படத்தில் நான்தான் ஹீரோவா நடிக்க வேண்டியது.. கை நழுவி போனதை நினைத்து வருந்தும் பிரபல நடிகர்
தரணி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் தூள். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஜோதிகா மற்றும் ரீமா சென் நடித்திருப்பார்கள்.
தூள் படம் ரசிகர்களிடையே இன்றளவும் ரிப்பிட் மோடில் பார்க்க தூண்டும் படம். 2003ஆம் ஆண்டு வெளிவந்து தூள் படம் நான்கு மடங்கு லாபம் ஈட்டியதாக தெரிவித்துள்ளனர். இப்படத்தின் மொத்த பட்ஜெட் 7 கோடிதானாம் ஆனால் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டில் கிட்டத்தட்ட 30 கோடி வரை வசூல் ஈட்டியதாம்.
பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்த இந்த படத்தில் விக்ரமிற்கு முன்னதாக தளபதி விஜய் நடிக்க வேண்டியது. ஆனால் மற்ற படங்களில் பிசியாக இருந்ததால் நடிக்க முடியவில்லை என்று அவர் தெரிவித்து விட்டாராம்.
இன்றளவும் கமர்ஷியல் ஹிட், அரசியல் சாயம் பூசப்பட்டு இந்த படத்தில் நான் நடிக்க மறுத்தது பெரும் தவறு என்று தளபதி வருந்திய காலமுண்டாம், இதனை ஒளிப்பதிவாளர் கோபிநாத் ஒரு பேட்டியில் தெரிவித்திருப்பார்.
இதுபோன்று மெகா ஹிட் படங்களான கில்லி மற்றும் தூள் படங்களில், விக்ரம் இடத்தில் தளபதி விஜய்யும், விஜய் இடத்தில் விக்ரமும் நடித்திருக்க வேண்டியது, ஆனால் விட்டுக்கொடுத்து வெற்றிகளை கண்ட சிறந்த நடிகர்கள் என்றே கூறலாம். மேலும் விஜய், விக்ரம் சிறந்த நடிகர்கள் மட்டும் அல்ல சிறந்த நண்பர்களும் கூட.
