Sports | விளையாட்டு
இதனால் தான் ஜெகதீசனை டீம்மில் சேர்க்கவில்லையாம் தோனி- வல்லவனுக்கு சாவ்லாவும் ஆயுதம்
சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த ஐபிஎல் சீசனில் பரிதாபமான நிலையில் தான் உள்ளனர். முதல் 7 போட்டிகளில் இரண்டு வெற்றி, எனவே அடுத்த ஏழில் 6 வெற்றி பெற்றால் மட்டுமே பிளே – ஆப் செல்வது சுலபம் என்ற நிலையில் உள்ளது டீம்.
டாடிஸ் டீம் இவ்வளவு மோசமான சூழலில் இதற்கு முன் இருந்தது ஏனில் அது 2010 இல் தான். அம்முறை தொடர்ச்சியாக போட்டிகளை ஜெயித்து, பிளே ஆப் சென்று, கப்பையும் வென்றனர். இம்முறை அது போல நடக்குமா என ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்தது. 168 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சி எஸ் கே பேட்டிங் முதலில் ஆடியதே வெற்றிக்கு முதல் கரணம் என்று கூட செல்லலாம். மேலும் சாம் கர்ரன் ஒபெநிங் ஆட வந்தார் டு பிளெஸ்ஸி அவர்களுடன். 21 பாலில் 31 எடுத்தார். அனைவருமே அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர்.
தோனி சீசன் ஆரம்பத்தில் ஐந்து பௌலர்களுடன் களம் இறங்கினார். அது ஒர்க் அவுட் ஆகவில்லை என 6 பந்துவீச்சாளர்கள் என செக்க ஆரம்பித்தார். நேற்று நடந்த போட்டியில் 7 பௌலர்கள் என்பதே அனைவர்க்கும் ஆச்சர்யம். முந்தய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மான் நாராயணன் ஜெகதீசன் சேர்க்கப்பட்டார். அவர் மத்திய வரிசையில் ஆடி செட் ஆன சூழலில் 28 பாலில் 33 ரன் எடுத்து துரதிருஷ்ட விதமாக ரன் அவுட் ஆனார். அவரை டீம்மில் இருந்து நீக்கி விட்டு பியூஸ் சாவ்லா சேர்க்கப்பட்டார்.

csk narayanan jagadeesan
இது என்னடா கொடுமை ஜாதவ், வாட்சன் போன்ற சீனியர்களுக்கு தோனி வாய்ப்புகளை வாரி வழங்கினார் இளம் வீரரை ஒரே போட்டியுடன் காலி செய்துவிட்டார் என இணையத்தில் பேச ஆரம்பித்தனர். இதற்கான பதில் மேட்ச் முடிந்த பின் தோனி பேசிய பொழுது கிடைத்தது ..
இந்த விக்கெட் சற்றே இரண்டு விதமாக தோன்றியதாகவும், எனவே ஒரு ஸ்பாட் தான் இருந்ததது எனவும், அதில் இந்திய பேட்ஸ்மான் (ஜெகதீசன்) சேர்த்து அவரை 7 / 8 பொசிஷனில் இறக்குவது ஏற்றது கிடையாது, ஏனெனில் கர்ரன் ஒபெநிங் இறக்க திட்டமிட்டோம். அதனால் தான் ஜடேஜாவை ஆட வைத்தோம் என கூறினார்.
ஒரு விதத்தில் அவர் கூறியது உண்மை தான். நேற்றய ஆடுகளம் நமது சென்னை பிட்ச் போன்றே இருந்தது. இதுவே சென்னை டீமிற்கு ஏற்ற களம். டாஸ் வென்றதனால் பேட்டிங் எடுத்து ரன் குவித்து விட்டனர். மேலும் ஹைதெராபாத் மத்திய வரிசை வீக், எனவே சுலபமாக முடிந்தது வேலை. ஆனால் டாஸ் தோற்கும் பட்சத்தில் முதலில் பௌலிங் வீசும் சூழல் வந்திருந்தால், மூன்று சபின்னேர்களின் தேவை வந்திருக்கும். எனவே தான் சாவ்லாவை சேர்த்திருப்பார். ஆனால் இதே ட்ரிக் எப்பொழுதும் உதவாது.
வெளிநாட்டு பேட்ஸ்மான் பெஞ்சில் இல்லை, எனவே இந்தியர் ஒருவரை தான் சேர்த்தாக வேண்டும். ஜெகதீசன் / கைக்கவாட் / முரளி விஜய்/ ஜாதவ் இதில் ஒருவரை தான் அணியில் சேர்க்க முடியும், இதில் தோனி யாரை சேர்ப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
