Sports | விளையாட்டு
டைட்டானிக் போல மூழ்கிய சிஎஸ்கே! டீமுக்காக தோனியின் அடுத்த பிளான் இது தானாம்
10 போட்டிகளில், ஏழில் தோல்வி, 6 புள்ளிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் பாயிண்ட்ஸ் டேபிளில் கடைசி இடத்தில உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல் முறை சென்னை இந்தளவுக்கு சொதப்பியது.

ipl points table
நேற்று அபுதாபியில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் டீம்மிடம் படு தோல்வியை தழுவியது சென்னை. டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தனர். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை மட்டுமே எடுத்து உள்ளது. இதனால் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான டார்கெட்டுடன் ஆடிய ராஜஸ்தான் 17. 3 ஓவரில் மூன்று விக்கெட் இழப்புக்கு வென்றனர்.
பந்துவீச்சில் பவர் பிலே சமயத்தில் வீழ்த்தப்பட்டதே அந்த மூன்று விக்கெட்டுகளும். அதன் பின் ஸ்பின்னர்கள் பெரிதாக சோகை போகவில்லை. பேட்டிங் சொதப்பல் தான் நேற்றும் தோல்விக்கு காரணம்.
இந்நிலையில் போட்டி முடிந்த பின் தோனி பேசியது பின்வருமாறு ..
“வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பிட்ச் ஏதுவாக இருந்தது. அதனால் தான் ஜடேஜாவை கொண்டு வந்து பார்த்தேன், பந்து முதல் இன்னிங்ஸ் போல ஸ்பின் ஆகவில்லை. எனவே பாஸ்ட் பௌலிங் தொடர்ந்தேன், ஸ்பின்னுக்கு அதிகம் வாய்ப்பு இல்லை. எப்பொழுதும் நமக்கு சாதகமாகவே நடக்காது. எங்கள் செய்முறையே தவராகிவிட்டதா என அலசி பார்க்க வேண்டும். செயல்முறையின் விளைவு தான் முடிவு. நாம் செய்யவேண்டியதை கரெக்ட்டாக செய்யும் பட்சத்தில் வெற்றி, தோல்வி என்ற முடிவினால் அழுத்தம் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு வராது. நாங்கள் என்ன வென்று ஆலோசிக்க வேண்டும்.
சில போட்டிகளுக்கு பிறகு டீம்மில் அதிக மாற்றம் செய்ய கூடாது, அப்படி செய்தால் எதுவுமே ஒர்க் அவுட் ஆகாது. பாதுகாப்பின்மை என்ற சூழல் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு ஏற்றது இல்லை. பலரும் சொல்வது போல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது உண்மையே. இந்த சீசன் நாங்கள் அந்த அளவுக்கு தகுதியான டீமாக இல்லை.
சில இளம் வீரர்களிடம் நாங்கள் அந்தளவுக்கு உத்வேகத்தை பார்க்கவில்லை. அடுத்த போட்டிகளில் அவர்களை ஆட வைப்போம், அவர்களும் அழுத்தம் ஏதும் இன்றி விளையாட முடியும்.” என சொல்லி முடித்தார்.
இப்பவுமே சென்னை டீம் தகுதி பெற சிறிய வாய்ப்பு இருக்கு என மனம் தளராமல் பிற போட்டிகளின் முடிவை நோக்கியும் ஒரு சில ரசிகர்கள் உள்ளனர். தல தோனிக்கே இல்லாத நம்பிக்கை இவர்கள் வசம். பல ஓட்டைகள் இருந்த கப்பல் கட்டாயம் மூழ்கியே தீரும்.
