Connect with us
Cinemapettai

Cinemapettai

Sports | விளையாட்டு

அடுத்த 3 போட்டிகளில் தோனி விளையாடுவாரா? அவரே வேதனை கலந்த சிரிப்புடன் சொல்லிய பதில்

அந்தோ பரிதாபம் என சொல்லும் அளவுக்கே உள்ளது சி எஸ் கே டீம்மின் பெர்பார்மன்ஸ். போட்டிகள் செல்ல செல்ல தோல்விகள் மிக எளிதாக வருகிறது என்பதே நிதர்சனமான உண்மை. நேற்றயை போட்டியில் மூன்று வீரர்களை மற்றயும் எந்த பயனும் இல்லை என்றே தோன்றியது.

மும்பை டாஸ் வென்றது இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. 3 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்து தவித்த சிஎஸ்கேவை தனி ஆளாக நின்று கரை சேர்க்க போராடினார் சாம் கர்ரன் (52 ரன்கள்). மும்பை இந்தியன்ஸ் 12 .2 ஓவரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது.

dhoni-csk-ipl-2020-cinemapettai

dhoni-csk-ipl-2020-cinemapettai

போட்டிக்கு பின் தோனி பேசியதன் சாராம்சமே இந்த தொகுப்பு …

மனசு வலிக்கத்தான் செய்கிறது. இந்த வருடம் எங்களுக்கு சிறப்பானதாக அமையவில்லை. எங்கே தவறு நடந்தது என பார்க்க வேண்டும். எப்படி தோற்கிறோம் என்கிறதை பொறுத்தது என சொல்ல முடியாது, ஆனால் இந்த நேரத்தில் மனவருத்தம் இருக்கத்தான் செய்கிறது. இரண்டாவது போட்டிக்கு பின் என்ன தவறு நடந்தது என பார்க்க வேண்டும். ராயடுவுக்கு காயம் ஏற்பட்டது. பந்துவீச்சில் சொதப்பினோம், பேட்ஸ்மான்கள் தங்கள் முழு திறனை கொடுக்கமுடியவில்லை, லக்கும் எங்கள் வசம் இல்லை. முதலில் பேட் செய்ய நினைத்தோம் டாஸ் ஜெயிக்கவில்லை. திடீரென பனி இல்லை, எதிர்பார்த்த நேரத்தில் வந்தது.

நன்றாக விளையாடததற்கு 100 கரணங்கள் சொல்லலாம், ஆனால் எப்பேர்ப்பட்ட சூழலிலும் முழு திறனுடன் இல்லாமல் விளையாடினோமா என நம்மை நாமே கேட்டுக்கொள்வோம். ஸ்டாட்ஸ் நல்ல டீம் என்றே சொல்கிறது, ஆனால் அது போல விளையாடவில்லை. தொடர்ச்சியான பேட்டிங் சொதப்பல்கள். எப்பொழுதும் முடிவு நமக்கு சாதகமாக அமையும் என்பது கிடையாது, இது கிரிக்கெட்டின் ஒரு அங்கம் தான், இருப்பதிலேயே கடினமான ஒன்று எனில் வருத்தத்தில் இருக்கும் சமயத்தில் சிரித்துக்கொண்டே கஷ்டமான சூழலை எதிர்கொள்வது. அதனை செய்தனர் டீம் நபர்கள்.

நிர்வாகம் பெரிதாக பதட்டம் ஆகவில்லை. அடுத்த சீசனை பற்றி யோசிக்க வேண்டும். விளையாடும் மைதானம் எப்படி, எந்த மாதிரி வீரர்கள் தேவை என ஐடியா பண்ண வேண்டும். அடுத்தாஹ் மூன்று போட்டிகள் அதற்கு பயன் படும். அடுத்த சீசனுக்கு இளையவர்களை தயார் செய்யலாம். யார் அழுத்தத்தை சமாளித்து பேட்டிங், பௌலிங் நன்றாக செய்கிறார்கள் என. பெஞ்சில் உள்ளவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

(நீங்கள் கட்டாயம் அடுத்த 3 போட்டியில் ஆடுவீர்கள் தானே, ஆடவேண்டும் என கேட்டதற்கு) கேப்டன் என்ற காரணத்தால் நான் எங்கும் ஓடி ஒளிந்துவிட முடியாது. எனவே அடுத்த மூன்று போட்டிகளிலும் விளையாடுவேன். அடுத்துவரும் மூன்று போட்டிகளில் நாங்கள் சிறந்ததை கொடுப்போம்.” என பேசிமுடித்தார்.

Continue Reading
To Top