Sports | விளையாட்டு
இது தாங்க எங்க டீம்மில் பிரச்சனை- விரக்த்தியில் புலம்பிய தோனி
ஐபிஎல் 2020 புதிய சீசன் துவங்கி போட்டிகள் ஜரூராக நடந்து வருகிறது. நம் இந்தியாவில் நடக்காவிட்டாலும் டிவியில் பார்த்து கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்கின்றனர்.
அதிக ரசிகர் வட்டம் உடைய டீம் சி எஸ் கே. இதுவரை ஆடிய அனைத்து சீசன்களிலும் பிளே – ஆப் வரை தகுதி பெற்ற டீம். டாடிஸ் டீம் என தொடர்ந்து கலாய்க்கப்பட்டாலும், வெற்றிகளை தட்டி செல்வர். கடைசி வரை போட்டியை எழுத்து சென்று நம் bp எகிற வைத்து ஜெயித்த டீம் சென்னை சூப்பர் கிங்ஸ். ஆனால் இம்முறை பரிதாப தோல்வியை தழுவி வருகின்றனர். குறிப்பாக சென்ற கொல்கத்தா போட்டி, மற்றும் நேற்றய பெங்களூரு போட்டியை பார்க்கும் பொழுதும் ஜெயிக்கும் எண்ணமே இல்லப்பா, இந்த டீம் கிட்ட என சொல்லும் அளவுக்கு நிலை வந்துவிட்டது.
நேற்று 37 ரன் வித்தியாசத்தில் தோற்றது சென்னை. சேஸிங்கில் எந்த சூழலிலும் டார்கெட் அருகில் கூட இல்லை என்பதே வருத்தம். 7 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி மட்டும் பெற்று 6 ஆம் இடத்தில உள்ளது இந்த டீம். அந்தோ பரிதாபம் தான்.

ipl 2020
போட்டிக்கு பின் போஸ்ட் மேட்ச் சந்திப்பில் தோனி பேசியது பின் வருமாறு …
“நாங்கள் பந்து வீசும் பொழுது கடைசி நான்கு ஓவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். பேட்டிங் சீசன் ஆரம்பத்தில் இருந்தே கவலை தரக்கூடிய விஷயம் தான், இன்றும் அப்படியே. எதாவது உடனடியாக செய்ய வேண்டும். அவுட் ஆனாலும் பெரிய ஷாட்ஸ் அடித்து ஆட வேண்டும், அவ்வாறு செய்தால் அது பயன் அளிக்க கூடும். வரும் போட்டிகளில் இதனை செய்யலாம். இதுவரை பார்க்கும் பட்சத்தில் 6 வது ஓவருக்கு பிறகு அடித்து ஆடவில்லை. நீங்கள் எவ்வளவு தன்னம்பிக்கை கொடுத்தாலும் தனி மனிதர்கள் சில நேரங்களில் முடங்கி போய் விடுவர். 6 – 14 வது ஓவர் நடக்கும் சூழலில் ஆட அல்லது எதிர்த்து போராட நல்ல திட்டம் வகுத்து ரெடி ஆகவில்லை.
பழைய போட்டிகளின் முடிவை பற்றி யோசித்தால் அது தேவையில்லாத அழுத்தத்தையே கொடுக்கும், எனவே நான் வீரர்களிடம் நீங்கள் சரியாக தயாராகுங்கள் என்று மட்டுமே கூறுவேன். பந்துவீச்சில் எதிர் தேனம்மை சுருட்ட முடியும் என காமித்துள்ளோம். எனினும் ஒன்று ஆரம்பத்தில் அல்லது கடைசியில் ரங்கோலி அதிகம் வழங்கி விடுகிறோம். டீம் என்ற கப்பலில் நிறைய ஓட்டைகள் உள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் பொழுது எத்தனை ஸ்பின், வேகப்பந்து வீச்சாளர்கள் என கவனிக்க வேண்டும், எப்படியும் ஒரு நபரை மாற்றி உபயோகப்படுத்தலாம். 5 பௌலர்கள் என ஆரம்பித்து இப்பொழுது 6 என வந்துள்ளோம்.. எங்கள் பெரிய கவலை பேட்டிங் தான். வரும் போட்டிகளில் வீரியமாக விளையாட முயற்சிப்போம். 16 , 17 ஓவரில் அவுட் ஆனாலும் பரவாயில்லை. ” என பேசி முடித்தார்.
தோனி சங்கடத்தில் நெளிந்தது அனைவருக்குமே அப்பட்டமாக தெரிந்தது.
