உச்சக்கட்ட டென்ஷனில் தோனி.. முக்கிய வீரரை தூக்கியெறியும் முடிவில் சிஎஸ்கே

சென்னை அணி தான் விளையாடிய 4 போட்டிகளிலும் படுதோல்வியடைந்தது. சென்ற முறை கோப்பையை வென்ற சென்னை அணி இந்த முறை ஜடேஜாவின் கேப்டன்சியில் விளையாடி வருகிறது. மகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் விட்டுக்கொடுத்து விளையாட வைத்திருக்கிறார்.

சென்னை அணியின் தொடர் தோல்விகளுக்கு காரணமாக விளங்குவது அந்த அணியின் பவுலிங் யூனிட் தான் . தீபக் சஹார் இல்லாததால் முகேஷ் சௌத்ரியை வைத்து சமாளித்து வருகின்றனர். ஆனால் அந்த அணியின் ஓபனிங் அதிரடி பேட்ஸ்மேனான ருதுராஜ் கெயிக்வாட் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

நான்கு போட்டிகளிலும் சொதப்பிய அவரால் சென்னை அணிக்கு நல்லதொரு ஓபனிங் ஸ்டார்ட் கொடுக்க முடியவில்லை. இதனால் தோனி சற்று அப்செட்டில் இருப்பதாக தெரிகிறது.

இந்த காரணத்தினால் இவரை அணியில் இருந்து நீக்கிவிட்டு, வாய்ப்புகாக காத்துள்ள டெவோன் கான்வே, சேனாதிபதியை களமிறக்க வேண்டும் என்ற பேச்சுக்கள் நிலவி வருகிறது.

இந்நிலையில் இதற்காக ருதுராஜுடன், தோனி அவசர மீட்டிங் நடத்தியுள்ளார். அடுத்து நடக்கவிருக்கும் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி தான் ருதுராஜுக்கு கடைசி வாய்ப்பு என்றும், அதில் விளையாட விட்டால் அணியில் 11 பேர் கொண்ட பட்டியலில் இருந்து விடுவிக்கப் படுவார் என்றும் தோனி வார்னிங் கொடுத்ததாக தெரிகிறது.

இதனால் ருதுராஜ் அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி விளையாடினால் அவர் தொடர்ந்து சென்னை அணியில் விளையாடுவார். இல்லையென்றால் வாய்ப்புகள் மறுக்கப்படும் என்று வெளிப்படையாகத் தெரிகிறது

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்