Sports | விளையாட்டு
கேப்டன்சியில் தடுமாறும் தோனி! ஜெகதீசனை இப்படி வைச்சு செஞ்சுட்டாரே
லேட்டாக தொடங்கினாலும் UAE யில் ஐபிஎல் 2020 புதிய சீசன் துவங்கி போட்டிகள் ஜரூராக நடந்து வருகிறது. இதுவரை ஆடிய அனைத்து சீசன்களிலும் பிளே – ஆப் வரை தகுதி பெற்ற டீம் என்ற பெருமை உடைய டீம் சி எஸ் கே. ஆனால்இந்த சீசன் அவர்களுக்கு நல்ல படியாக அமையவில்லை.
டாடிஸ் டீம் என தொடர்ந்து கலாய்க்கப்பட்டாலும், வெற்றிகளை தட்டி செல்வது இவர்கள் ஸ்டைல். சீனியர் வீரர்கள் தான் அதிகம், இளசுகள் குறைவு தான். கடைசி வரை போட்டியை இழுத்து சென்று நம் bp எகிற வைத்து ஜெயித்த டீம் சென்னை சூப்பர் கிங்ஸ். ஆனால் இம்முறை பரிதாப தோல்வியை தழுவி வருகின்றனர். இந்த டீம் கிட்ட என சொல்லும் அளவுக்கு நிலை வந்துவிட்டது.
நேற்று 37 ரன் வித்தியாசத்தில் தோற்றது சென்னை. 7 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி மட்டும் பெற்று 6 ஆம் இடத்தில உள்ளது இந்த டீம். அந்தோ பரிதாபம் தான். தோனி என்ற தனி நபர் தடுமாறுவது தான் டீம்மின் தோல்விக்கு காரணமா அல்லது சென்னை ஆடுகளத்துக்கு ஏற்ப டீம் இவர்கள் எடுக்க, துபாய் சென்றது தான் காரணமா என அனைவரும் ஆலோசித்து வருகின்றனர்.

csk narayanan jagadeesan
நேற்று போட்டியில் கேதார் ஜாதாவுக்கு பதிலாக தமிழகத்தின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மான் நாராயணன் ஜெகதீசன் சேர்க்கப்பட்டார். இவர் துவக்க ஆட்டக்காரர். ஆனால் நேற்று இவருக்கு ஒபெநிங் வாய்ப்பு வழங்கப்படவில்லை. சுமாரான துவக்கம் தான் வாட்சன் மற்றும் டூபிளெஸ்ஸி கொடுத்தனர். 5 4 ஓவரில் 25 க்கு 2 என்ற சூழ்நிலையில் தான் ஜெகதீசன் இறங்கினார். அப்பொழுதே ரன் தேவை விகிதம் 10.12 என இருந்தது. அறிமுக வீரரை அனுப்பும் சூழல் கட்டாயம் அது இல்லை.
ஜடேஜா, கர்ரன் இருவரில் ஒருவரை அனுப்பலாம், மேலும் இடது, வலது காம்பினேஷனும் கிடைத்திருக்கும் ராயுடுவுடன். இல்லையெனில் தோனி அல்லது பிராவோ போன்றவர்கள் இறங்கி அடித்து ஆடி இருக்க வேண்டும். சேஸிங்கில் எந்த சூழலிலும் டார்கெட் அருகில் கூட இல்லை என்பதே வருத்தம். ஆனாலும் ஜெகதீசன் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன் படுத்தி ஆடினார். சிங்கிள்ஸ், டேபிள்ஸ் என ஓடி எடுத்து, பின்னர் பௌண்டரி அடித்து செட் ஆன சூழலில் 28 பாலில் 33 ரன் எடுத்து துரதிருஷ்ட விதமாக ரன் அவுட் ஆனார்.
சென்னை டீம்மை பொறுத்தவரை பேட்டிங் ஆர்டர் முடிவு செய்வது தோனி என்பது அனைவருக்கும் தெரியும். நேற்று மட்டுமல்ல இந்த சீசன் முழுக்க சில பல குளறுபடி உள்ளது. இதுமட்டுமன்றி பந்துவீச்சாளர்களை ரொட்டேட் செய்வதிலும் சொதப்பி தான் வருகிறார். முந்தைய கொல்கத்தா போட்டியில் ஜடேஜா பந்தே வீசவில்லை. நேற்று கூட அனுபவம் வாய்ந்த ப்ராவோவுக்கு ஓவர் இருக்கும் நேரத்தில் கர்ரன் அவர்களிடம் பால் கொடுத்தார். அதுமட்டுமன்றி சூப்பர் ஆக பந்து வீசிய சாஹர் தனது முழு கோட்டா நான்கு ஓவர்கள் வீசவில்லை.

bowling stats
சர்வதேச போட்டியில் இருந்து ஒய்வு பெற்றதாலா அல்லது ரெய்னா போன்ற எனெர்ஜிடிக் துணை கேப்டனை மிஸ் செய்கிறாரா என்பது தான் புரியாத புதிராக உள்ளது. விரைவில் தோனி மற்றும் சி எஸ் கே நிர்வாகம் முழித்து கொள்ளவில்லை எனில் கடைசி இரண்டு இடத்தில தான் சீசன் முடியும் என்பது மட்டும் உண்மை.
வா தல .. மீண்டும் எழுந்து வா கெத்தா, மாசா ..
