ஜமைக்கா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் கேப்டன் கோலி சதம் விளாச இந்திய அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 5 ஒருநாள், 1 டி-20 போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டியின் முடிவில், இந்திய அணி 2-1 என முன்னிலை வகித்தது.

இந்நிலையில் ஒரு அணிகள் மோதிய கடைசி ஒருநாள் போட்டி, ஜமைக்காவில் நடந்தது. இதில் ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கைல் ஹோப் (46), ஷாய் ஹோப் (51) ஆகியோர் கைகொடுக்க, அந்த அணி, 50
ஓவரில், 9 விக்கெட்டுக்கு 205 ரன்கள் எடுத்தது.

அதிகம் படித்தவை:  அஜித் கதாபாத்திரத்தில் நடிக்கும் பவர் ஸ்டார்

எட்டக்கூடிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு வழக்கம் போல, தவான் (4) சொதப்பலாக வெளியேறினார். ரகானே (39) ஓரளவு கைகொடுத்தார். பின் வந்த கேப்டன் கோலி, வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.

மின்னல் வேகத்தில் ரன்கள் சேர்த்த இவரை அவுட்டாக்க, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் எடுத்த அத்தனை முயற்சியும் வீணாக, ஒருநாள் அரங்கில் தனது 28வது சதத்தை பூர்த்தி செய்தார். இவருக்கு தினேஷ் கார்த்திக் நல்ல கம்பெனி கொடுத்தார்.

இதையடுத்து இந்திய அணி, 36.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அசால்ட்டாக வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என எளிதாக கைப்பற்றியது.

அதிகம் படித்தவை:  மோகன்லால் நடிப்பில் ட்ராமா திரில்லர் “நீராலி” மலையாள படத்தின் "அழகே அழகே" ரொமான்டிக் பாடல் வீடியோ !

தவிர, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் தொடர்ந்து மூன்றாவது ஒருநாள் தொடரை வென்று இந்திய அணி சாதனை படைத்தது.

இரு அணிகள் மோதும் டி-20 போட்டி, நாளை மறுநாள் (ஜூலை 9) இதே மைதானத்தில் (ஜமைக்காவின் சபைனா பார்க்) நடக்கிறது. இதில் வெஸ்ட் இண்டீஸ் சிக்சர் மன்னன் கிறிஸ் கெயில், போலார்டு உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் களமிறங்கவுள்ளனர்.