மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரும், மற்றும் மேட்ச் பினிசர் என்று அழைக்கப்படும் டோனி மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

114-பந்துகளை சந்தித்த அவர் 54-ஓட்டங்கள் எடுத்து கடைசியில் ஆட்டத்தை முடித்து வைக்க முடியாமல் பெளலியன் திரும்பினார். இப்போட்டியில் இந்திய அணி 11-ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இவரைப் போலவே இந்திய அணியின் மற்றொரு துவக்க ஆட்டக்காரரான ரகானேவும் இதே போன்ற ஆட்டத்தைத் தான் வெளிப்படுத்துகிறார்.

 

91-பந்துகள் சந்தித்த இவர் 60-ஓட்டங்கள் எடுத்தார். இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களில் சுயநலத்திற்காக விளையாடி வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

 

சமீபகாலமாக டோனியின் ஆட்டம் முன்பு போல் இல்லை, இதனால் அவர் அதிக அளவு ஓட்டமும் குவிக்கவில்லை என்ற பேச்சு எழுந்துள்ளது.

அணியில் நிலைத்திருக்க வேண்டும் என்றால் அவர் ஓட்டங்கள் குவிக்க வேண்டும். அப்படி ஓட்டங்கள் குவித்துவிட்டால் அவர்களுக்கு அடுத்த தொடரில் விளையாடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுவிடும்.

இதனால் அவர் அணியின் வெற்றியை கருத்தில் கொள்ளாமல், தனக்கு பின்னால் ஓட்டங்கள் இருந்தால் போதும் என்ற மனநிலையுடன் விளையாடி வருவதாகவும், அதுமட்டுமின்றி அடுத்த 2019-ஆம் ஆண்டு நடக்கும் உலகக்கிண்ணத் தொடர் வரை டோனி இந்திய அணியில் ஒட்டி இருக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் ரசிகர்களோ இளம்வீரர்களான ரிசப் பாண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் போன்றோர் வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் காத்துக் கொண்டிருக்கின்றனர், அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால் இவர்கள் வழிவிட வேண்டும் என்று கூறி வருகின்றனர்.