மெல்போர்ன்: முன்னாள் கேப்டன் தோனி அணியில் இல்லை என்றால், இந்திய அணி, மிடில் ஆர்டரில் அட்டம் காணும் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் வரும் ஜூன் மாதம் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதில் போட்டியை நடத்தும் அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணியும், ஐசிசி., யின் முழுநேர உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 7 அணிகளும் இத்தொடரில் பங்கேற்கின்றன.

இதில் பங்கேற்கும் எல்லா அணிகளும் தங்களது அணியை வெளியிட்ட நிலையில், கிரிக்கெட் வல்லரசான இந்தியா, இன்னும் ஐசிசியை ஆட்டம் காண வைத்து வருகிறது. இத்தொடருக்காக எல்லா அணிகளும் முழுமையாக தயாராகிவரும் நிலையில், இந்திய அணிக்கு கேப்டன் தோனி நிச்சயம் தேவை என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாண்டிங் கூறுகையில்,’ ஒருநாள் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டர் வீரர்களில், நம்பர்-1 வீரர் தோனி. அந்த இடங்களை எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும், சர்வசாதரணமாக அவர் சமாளிப்பார். இங்கிலாந்தில் வேகப்பந்து எடுபடும் என்பதால், டாப் ஆர்டர் வீரர்கள் வேகமாக அவுட்டாக வாய்ப்பு உள்ளது. அதனால், அணியை வழிநடத்த, தோனி போல ஒரு டாப் -கிளாஸ் மிடில் ஆர்டர் வீரர் நிச்சயமாக இந்திய அணிக்கு தேவை,’ என்றார்.