ஐபில்

11-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 7 முதல் தொடங்க உள்ளது.முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இரண்டு வருடம் கழித்து தன் தன் ரீ என்ட்ரிக்கு சி எஸ் கே டீம் முழு வீச்சில் தயாராகி வருகின்றது.

meme

ஒருபுறம் புதிய விளம்பரங்கள், ப்ரோமோ வீடியோ , மார்க்கெட்டிங் நிகழ்ச்சிகள் என அசத்தி வருகின்றனர். அதே போல் மறுபுறம் பயற்சயில் ஈடுபட்டும் வருகின்றனர்.

தல தோனியை பொறுத்தவரை சென்னை புகுந்த வீடு தான். இவருக்கு இங்கு பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. சென்னை வீரர்கள் நெட் ப்ராக்டிஸ் செய்வதை பார்ப்பதற்கென்றே தினமும் ரசிகர்கள் சேபாக் செல்கின்றனர்.

இந்நிலையில் பயற்சயின் பொழுது, ஒரு சிறு இடைவெளி எடுத்து தோனி குட்டி பையன் ஒருவனுடன் குறும்பாக விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.