Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தங்க மீன்கள் ராம் ஸ்டைலில் தன் செல்ல மகளுக்கு பணிவிடை செய்யும் தோனி ! வீடியோ உள்ளே !

1 வது சீசன் ஐபில் போட்டிகள் துவங்கி கோலாகலமாக நடந்து வருகின்றனர். இரண்டு வருடம் கழித்து கம் பேக் கொடுத்த சென்னை அணி அசத்தி வருகின்றனர். முதியோர் கிரிக்கெட்டா என்று கலாய்த்தவர்கள் அனைவரும் சீட் நுனியில் அமர்ந்து, பிரஷர் அதிகரிக்க கடைசி ஓவர் வரை மேட்ச் பார்ப்பது இந்த சீசன் வாடிக்கையாகிவிட்டது.

நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர் சி பி – சி எஸ் கே அணிகள் மோதின. பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. சென்னை அணி பேட்டிங்கில் விக்கெட்டுகளை சொற்ப ரன்னில் இழந்தது. ஒன்பதாவது ஓவரில் கேப்டன் தோனி ராயுடுவுடன் ஜோடி சேர்ந்தனர். இவரும் தோணியும் ஐந்தாவது விக்கெட்டுக்கு 101 ரன் பார்ட்னர்ஷிப் எடுத்தனர். ராயுடு 82 ரன்களில் ரன் அவுட்டானார். தோனி 34 பாலில் 70 ரன் எடுத்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

இந்நிலையில் மேட்ச் முடிந்த பின் தோணி ” மேட்ச் முடிந்தது. நன்றாக தூங்கியாச்சு. அப்பாவின் கடைமையை செய்ய வேண்டிய நேரம் ..” என்று வீடியோ ஒன்றை டீவீட்டினார்.

அதில் ஹோட்டல் ரூமில் தனது மகள் ஜிவாவின் முடியை ட்ரயர் வைத்து அவர் சரி செய்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top