தினேஷ் கார்த்திக் போட்டுக் குடுத்த ஸ்கெட்ச்! 2 தமிழக வீரர்களை வைத்து ஐபிஎல் கப் ஜெயிப்பாரா தோனி

ஐபிஎல் பொறுத்தவரை என்றுமே ஜாம்பவான் டீம் எனில் அது மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் தான். கடந்த 2020 சீசன் தான் ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக சி எஸ் கே பிளே – ஆப் ஆட தகுதி பெறவில்லை. இந்த தோல்வி பலருக்கும் ஆச்சர்யத்தையும், சி எஸ் கே ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும் அளித்தது.

தோனி சி எஸ் கே டீம்மில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்குவதை தவிர்த்து சீனியர் வீரர்களை தான் நம்புகிறார் என்பது ஐபிஎல் பார்க்கும் அனைவருக்குமே தெரியும். சென்ற சீசனில் இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என தோனி பேசியது அப்போதைய சர்ச்சை. அதுமட்டுமன்றி நம் தமிழக வீரர்கள் டீம்மில் ஆடும் 11 வீரர்களில் இடம் பெறாததும் ரசிகர்களுக்கு வருத்தமே.

இம்முறை நம் லோக்கல் டி 20 போட்டியான சையத் முஸ்தாக் அலி கோப்பையில் தோல்வியை சந்திக்காமல் கப் அடித்தது தமிழகம். டீம்மின் கூட்டு முயற்சி மற்றும் தினேஷ் கார்திக்கின் கேப்டன்ஷிப் தான் வெற்றி காரணம்.

எனினும் தமிழக அணியில் சாய் கிஷோர், என் ஜெகதீசன் (இருவரும் சி எஸ் கே) வீரர்கள் சிறப்பாக ஆடினார்கள். சென்ற ஐபிஎல் சீசனில் என் ஜெகதீசன் இரண்டு போட்டிகளில் மட்டும் சிஎஸ்கே அணிக்காக ஆடினார், கிஷோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. தொடர்ச்சியாக ஜாதவ் மற்றும் சாவ்லாவுக்கு தான் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இம்முறை ஜெகதீசன் ஒபெநிங் இறங்கி இந்த தொடரில் அதிக ரன் குவித்த வீரர் என சாதித்தார். 364 ரன்கள், சராசரி 72.8 ஸ்ட்ரைக் ரேட் 141.09 . அதே நேரம் கிஷோரின் பவர் பிளே பந்துவீச்சு அருமையோ அருமையாக இருந்தது. கிஷோர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அதுவும் 4.82 என்ற எகானமயில். பைனலில் இவர் 4-1-11-0 அசத்தினார்.

N JAGADEESAN SAI KISHORE

இந்த இருவருக்கும் வரும் சீசனில் கட்டாயம் போதிய வாய்ப்பை தரவேண்டும் தோனி என்பதே பலரின் கருத்தாக உள்ளது. மேலும் பாபா அபரஜித் போன்ற வீரரை ஏலத்தில் எடுக்கும் பட்சத்தில் பேட்டிங் ஆல் ரௌண்டராக டீமுக்கு பக்கபலமாக இருப்பார். நாமும் நமது மாநில வீரர்களை நமது சென்னை அணியில் பார்க்க முடியும்.