முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தோனி அவர்கள் சில தினங்களுக்கு முன்தான் நூறாவது அரைசதம், 300 போட்டிகள் என்று வரிசையாக அடுத்தடுத்து சாதனைகள் செய்தார்.

இதனிடையே சென்ற வாரம் மழையின் காரணமாக இரண்டாவது ஒருநாள் போட்டி தடை பெற்றதால் கிரிக்கெட் பயிற்சியின் இடைவெளியில் கொல்கொத்தா போலீஸ் பயிற்சி பள்ளிக்கு சென்றிருந்தார்.

dhoni

அங்கு நடந்த துப்பாக்கி சுடும் பயிற்சியில் தோனியும் கலந்து கொண்டு 10 மீட்டர் மற்றும் 25 மீட்டர் தொலைவு தூர இலக்கை சுட்டுள்ளார். அவரது குறிபார்த்து சுடும் திறனை கண்டு காவல் அதிகாரிகள் மிகவும் வியந்து தங்கள் முக நூல் பக்கத்தில் அதை பாராட்டி பகிர்ந்துள்ளனர்.

இது குறித்து தோனி கூறுகையில் எனக்கு பிஸ்டல் மிகவும் பிடிக்கும், கொல்கொத்தாவில் எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை பெருமையாக கருதுகிறேன், இதற்காக காவல் துறைக்கு எனது நன்றிகளை என்றும் தெரிவிப்பேன்” என்று கூறியுள்ளார்.