Sports | விளையாட்டு
16 வருடத்தில் தல தோனி இப்படி செய்து பார்த்ததில்லை.. முன்னணி வீரரின் பேட்டியால் உச்சகட்ட எதிர்பார்ப்பில் CSK ரசிகர்கள்
கொரோனாவின் பாதிப்பு இருந்தாலும் கூட ஐக்கிய அரபு நாடுகளில் வைத்து வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி ஐபிஎல் மேட்ச் தொடங்க உள்ளது.
ஏற்கனவே சிஎஸ்கே போட்டியாளர்களுக்கு கொரோனா இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மீண்டும் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இர்பான் பதான் சமீபத்தில் அளித்த பேட்டியில் சிஎஸ்கே கேப்டனும், இந்தியா அணியின் நம்பிக்கை நட்சத்திரம் தல தோனி பயிற்சி எடுப்பது சற்று வித்தியாசமாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமில்லாமல் பேட்டிங்கில் கவனம் செலுத்தாமல், கீப்பிங்கில் அதிகமாக கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.
வித்தியாசமான பல மாற்றங்களை வீடியோவில் கண்டதாகவும், இத்தனை வருடங்கள் இவரை இப்படி பார்த்ததில்லை என்றும் ஆச்சரியத்தில் தெரிவித்துள்ளார். இந்த வெறித்தனமான ஆட்டத்தை பார்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கு மற்றுமொரு காரணமாக ஏற்கனவே ஒரு வருடத்திற்கும் மேல் விளையாடவில்லை என்பது கூட இருக்கலாம். ஒரு நாள் போட்டியில் ஓய்வை அறிவித்து விட்டாலும், ஐபிஎல் மேட்சில் கண்டிப்பாக எதையாவது சாதிக்க வேண்டும்.
அப்படி ஒரு வெறி அவர் கண்ணில் பார்க்கலாம் என்று இர்பான் புகழாரம் சூட்டியுள்ளார். இதைக் கேட்ட சிஎஸ்கே ரசிகர்கள் மனதில் எதிர்பார்ப்புடன் கலந்த உற்சாகம் அதிகரித்து உள்ளது.
கிட்டத்தட்ட 54 நாட்கள் நடைபெற உள்ள இந்த போட்டியின் இறுதி ஆட்டம் நவம்பர் 10ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதற்குள் கொரோனா எந்த விதத்திலும் தாக்காத வகையில் இருந்தால் இது சாத்தியம், இல்லை என்றால் தோனி மட்டும் இல்லாமல் ரசிகர்களுக்கும் ஐபிஎல் கனவாகவே போய்விடும்.
