தோனியின் புதியசாதனை, சங்ககரா சாதனை முறியடிப்பு..!!! - Cinemapettai
Connect with us

Cinemapettai

தோனியின் புதியசாதனை, சங்ககரா சாதனை முறியடிப்பு..!!!

News | செய்திகள்

தோனியின் புதியசாதனை, சங்ககரா சாதனை முறியடிப்பு..!!!

தல தோணி என்றாலே மாஸ்தாங்க,தோணி சாதனைகள் ஏராளம் அதில் இதுவும் ஒன்று,இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் டோணி ஒருநாள் போட்டிகளில் 100 ஸ்டம்பிங் செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இலங்கை தலைநகர் கொழும்பில் ஆர் பிரேமதாஸா மைதானத்தில் இலங்கைக்கு எதிராக கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் தனன்ஜெயை ஸ்டம்ப் அவுட் செய்தார். இது டோணிக்கு 301-ஆவது ஒரு நாள் போட்டியாகும்.

இதன் மூலம் விக்கெட் கீப்பராக உள்ள டோணி இதுவரை கலந்து கொண்ட ஒரு நாள் போட்டிகளில் 100 ஸ்டம்பிக் செய்து சாதனை செய்துள்ளார். இதற்கு முன்னர் இலங்கை வீரர் சங்ககரா 99 ஸ்டம்பிங் செய்து சாதனை படைத்திருந்தார்.dhoni

அதை டோணி முறியடித்துவிட்டார். இதன் மூலம் 100 ஸ்டம்பிங் செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமை பெற்றார் டோணி

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top