இந்திய ஒருநாள், டுவென்டி; அணி கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்றை, மையமாக கொண்ட இந்திப் படம், எம்.எஸ்.தோனி தி அன் டோல்ட் ஸ்டோரி; என்ற பெயரில், தயாராகி உள்ளது. படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி, நேற்று, சென்னை, சத்யம் தியேட்டரில், நடந்தது. நிகழ்ச்சியில் மேடையில் ரஜினி போல பேசி, அசத்தினார் தோனி.

படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடலை, தோனி வெளியிட்டார். செப்., 30ல், படம் வெளியாகிறது. இப்படம், தமிழிலும் மொழி மாற்றம் செய்து, வெளியிடப்பட உள்ளது. சென்னை வந்த தோனி, ஆழ்வார்பேட்டை, செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள நடிகர் தனுஷ் இல்லத்தில், ரஜினியை சந்தித்து பேசினார்.

அதிகம் படித்தவை:  விஜய்க்கு அடுத்துதான் ரஜினி முருகதாஸ் அதிரடி திட்டவட்டம்.!

இதுகுறித்து, தோனி கூறுகையில்,ரஜினியை நேரில் சந்திக்க வேண்டும் என்பது, என் நீண்ட நாளைய ஆசை. ஆனால், அவ்வளவு பெரிய நபரை, எப்படி சந்திப்பது என, தெரியாமல் இருந்தேன். தற்போது. இந்த பட வாய்ப்பை பயன்படுத்தி, அவரை நேரில் சந்தித்து விட்டேன் என்றார். சந்திப்பின் போது எனக்கு பிடித்த நகரம் சென்னை என, ரஜினியிடம், தோனி கூறியுள்ளார்.

அதிகம் படித்தவை:  2.0 பிறகு சூப்பர்ஸ்டார் நடிக்கும் படம் ? இயக்குனர் இவரா?

பின்னர் சூர்யாவின் குழந்தைகளிடம் பேசிய அவர், ” நான் உங்கள் தந்தையின் ரசிகன். அவரது சிங்கம் படத்தை நான் சப் டைட்டிலில் பார்த்து ரசித்தேன்” என்றார்.