Sports | விளையாட்டு
ஆக்ரோஷ தோனி: பதறிய ஜடேஜா! மைதானத்தில் அட்ராசிட்டி
ஐபில் 11 வது சீசன் லீக் ஸ்டேஜின் முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. டெல்லி தவிர்த்து மற்ற அணிகளில் எதுவேண்டுமானாலும் பிலே ஆப் விளையாட தகுதி பெற வாய்ப்புள்ளது.
கடந்த சண்டே நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை வென்றதன் மூலம் சூப்பர் கிங்ஸ் பிலே – ஆப் விளையாட தகுதியாகி உள்ளது. பொதுவாகவே கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் நம் தோனி செய்த ஒரு காரியம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
முதல் இன்னிங்க்சில் 7 வது ஓவரை ஹர்பஜன் வீசினர். கட்சி பந்தில் தவான் மிட் விக்கெட் திசையில் சிங்கள் ஆடினார். கீப்பர் தோனி பந்தை நோக்கி விரைந்தார். அதே போல் லாங் ஆப் திசையில் இருந்து ஜடேஜாவும் வந்தார் பந்தை தடுக்க. அப்பொழுது பந்தை தடுத்தெடுத்த தோனி ஜடேஜாவை நோக்கி வீசுவது போல பாவ்லா செய்ய, ஜடேஜாவும் பயந்து தன் முகத்தை மூடினார். இதை பார்த்த ரசிகர்கள், வர்ணனையாளர்கள் என அனைவரும் நமட்டு சிரிப்பு சிரித்தனர். கேப்டன் கூல் தோனி, விளையாடிய இந்த விளையாட்டு வைரலாகி விட்டது.

CSK
