fbpx
Connect with us

ராக்கெட் ஷாட் தோனி கடந்து வந்த பாதை

ms dhoni

ராக்கெட் ஷாட் தோனி கடந்து வந்த பாதை

தோனியின் சாதனைகளை மறந்து பலரும் விமர்சித்து வந்தாலும் அவருக்கு உறுதுணையாக இருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள்.

தோனி- தலைவனுக்குரிய பண்புகள் அவரிடம் நிறைந்திருந்தன. ராஞ்சியில் எளிமையான குடும்பத்தில் பிறந்த தோனி அசைவ உணவு வாங்குவதற்கு பணம் இல்லாமல், பால் மட்டுமே குடித்தவர்.

பல கனவுடன் இருந்த தோனிக்கு உறுதுணையாக இருந்தது அவரது உழைப்பும் அவரின் சிந்தனைகளும் தான். இந்தியாவின் 21ஆண்டு கனவான உலகக்கோப்பையை  அவரால் வெல்ல முடிந்தது. தோனி தொடர்ந்து சொதப்பிய போதிலும் அவருக்கு தொடர்ந்து ஆதரவாக இருந்தவர் கங்குலி மட்டுமே.

2004ம் ஆண்டில் அவ்வளவா விளையாடாத தோனி 2005 ஏப்ரலில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சச்சின்  ரெண்டு ரன்னில் ரன் அவுட்  ஆக, தோனி 123 பந்தில் 148 ரன் எடுத்து உலகிற்கு அறிமுகப்படுத்தினார். ஷேவாக் அதிரடியை மட்டுமே பார்த்து வியந்திருந்த இந்திய ரசிகனுக்கு, தோனி வருகை மகிழ்ச்சி தந்தது.

தோனிக்கு அடுத்த இரண்டே ஆண்டுகளில் கேப்டன் பதவி  வந்தது. சச்சின், டிராவிட் எல்லோரும் டி20 உலகக்கோப்பையில் ஒதுங்கினார்கள். யுவராஜா? சேவாக்கா? தோனியா ? கேப்டனாக நியமிப்பது என பிசிசிஐ கேட்ட போது தோனியை சொன்னது சச்சின். தோனியை ஒரு சிறந்த கேப்டனாக மக்களும், சீனியர் வீரர்களும் ஏற்று கொண்டார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top