Sports | விளையாட்டு
பானி பூரி விற்கும் எம்.எஸ்.தோனி வீடியோ.. என்ன கொடுமைடா சாமி?
Published on
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக எம்எஸ் தோனி உள்ளார். 2019 உலகக்கோப்பை பின் கிரிக்கெட்டை விட்டு விலகி விடுவார் என்ற வதந்தி கிளம்பியது.
ஆனால் எம் எஸ் தோனி தற்போதுவரை அதற்கான விளக்கம் கூறவில்லை. எம் எஸ் தோனி சில நாட்களுக்கு முன்பு ராணுவ வீரராக பணியாற்றி உள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது.
தற்போது ஒரு பார்ட்டியில் பானி பூரி எடுத்துக் கொடுப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் எம் எஸ் தோனியை ரசிகர்கள் காண்பதற்கு பெரும் ஆர்வத்துடன் ஷேர் செய்து வருகின்றனர்.
தற்போது சௌரவ் கங்குலி தல தோனியின் தலைமையின் கீழ் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா விளையாடும் கிரிக்கெட் மேட்ச் ஒன்றை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
