சென்னை விமான நிலையத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தரையில் உற்சாகமாக அமர்ந்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

சென்னை சேப்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோனி, ஹர்திக் பாண்டியாவின் சிறப்பான ஆட்டத்தினால் ஆஸ்திரேலியாவை இந்தியா 26 ரன்கள் வித்தியாசத்தில் டக்வொர்த் முறையில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனைத் தொடர்ந்து 2வது ஒரு நாள் போட்டியில் போட்டி நடைபெறும் கொல்கத்தாவுக்கு செல்வதற்காக இந்திய அணி, ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சென்னை விமான நிலையத்துக்கு வந்த புகைப்படங்கள் , வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.

அவைகளில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு தளத்தில் தரையில் அமர்திருக்கும் காட்சிகள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.

அந்த புகைப்படங்களில் கோலி, பாண்டியா, பும்ரா, ராகுல் ஆகியோர் தரையில் அமர்ந்துள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர ஆட்டகாரரும் மிஸ்டர் கூலுமான முன்னாள் கேப்டன் தோனி தரையில் ரிலக்ஸாக படுத்திருக்கிறார்.

இந்த இரண்டு புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் மீம்ஸ் உருவாக்குபவர்களுக்கான இன்றைய தேவையை பூர்த்தி செய்துள்ளது.

இந்தப் புகைப்படத்தை தோனி தனத் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.