தல தோனி CSK அணியில் இல்லையா.? சிஎஸ்கே எடுத்த தவறான முடிவு

ஐபிஎல் என்றாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் கொண்டாட்டம்தான். தமக்கு விருப்பமான டீம்களை தேர்வு செய்து அந்த டீம்களுக்காக தங்களது ஆதரவை வழங்கி ஐபிஎல் போட்டியை திருவிழாவாக மாற்றுவார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு என்பதைத் தாண்டி நம் மனதிற்குள் ஆழப் பதிய வைத்தது இந்த ஐபிஎல் கொண்டாட்டம் என்று தான் கூற வேண்டும்.

அதிலும் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற அணியினை தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவின் பல மாநிலங்களில் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட காரணமாக இருப்பவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் தோனி தான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இத்தனை ஆண்டுகளாக வெற்றிகரமான சரித்திரத்தில் தடம் பதிக்கக் கூடிய ஒரு அணியாக கொண்டுவந்து இருப்பதில் தோனிக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது.

கேப்டன் தோனி இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இல்லை என்று கூறும் அளவிற்கு ரசிகர்கள் மனதை வென்று இருக்கிறார். மற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களையும் அப்படித்தான் ரசிகர்கள் மனதில் நினைத்து வைத்து இருக்கின்றனர். ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இந்த ஆண்டு இடம் பெற வேண்டும் என்று நினைக்கும் பல வீரர்களை இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தவறவிட்டு இருக்கிறது.

அதில், குறிப்பாக சின்ன தல என்றும் மிஸ்டர் ஐபிஎல் என்றும் அழைக்கக்கூடிய சுரேஷ் ரெய்னா அவர்களை ஆரம்பத் தொகையான 2 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்ட போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிதாக ஆர்வம் காட்டாமல் அவரை தவற விட்டது. அதோடு மட்டுமில்லாமல் அவரை எந்த அணியினரும் எடுக்காமல் விலைபோகாத வீரராக மாறியிருக்கிறார். இது முதல் சுற்று ஏலம் என்பதால் இரண்டாவது சுற்று ஏலத்தில் அவரை எடுப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கிரிக்கெட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அதன் பின், மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக திகழக்கூடிய டு ப்லஸ்ஸிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் தோனிக்கு அடுத்து இவர்தான் தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு வீரராக இருக்கக்கூடிய டூ ப்லஸ்ஸிசை ஏழு கோடி ரூபாய் ஏலம் கேட்டும், அதற்கு மேல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேட்காமல் அவர் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். அவரையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தவற விட்டு விட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செல்லப்பிள்ளையாக இருக்கக்கூடிய பிராவோவவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல் ஏலத்தில் தவற விடாமல் கெட்டியாக பிடித்து விட்டது. ராபின் உத்தப்பாவை ஆரம்ப தொகையான 2 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்திருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கக்கூடிய தோனியையும் மிகப்பெரிய இழுபறிக்குப் பின்னர் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்திருக்கிறது.

இந்த செய்தி காட்டுத்தீ போல பரவ ஆரம்பித்த பிறகு சமூகவலைதளத்தில் யோவ் காசு வேணும்னா கேளுயா நாங்க கூட அனுப்புறோம்..எங்க தலைய விட்டுடாதயா என்று தோனியின் ரசிகர்கள் கொந்தளிக்க ஆரம்பித்தனர். ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வயதானவர்களின் அணி என்று கிண்டல் செய்வார்கள்.

இப்படியிருக்கையில் திறமையான வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நழுவ விட்டால் என்ன செய்வது என்று அவர்களது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆரம்பத்திலிருந்து இந்த அணியை வைத்து கேப்டன் தோனி இன்று வரை சென்னை சூப்பர் கிங்ஸ் தலைகுனியா வண்ணம் வைத்திருக்கிறார் என்றால் நிச்சயம் அது பெருமை கொள்ளக்கூடிய ஒரு விஷயம்தான்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்