ஐ.பி.எல் தொடரில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு தோனி விளையாடா விட்டாலும் தோனி தான் தங்கள் ஹீரோ என்பதை ரசிகர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டனாக திகழ்ந்த தோனி கடந்த ஜனவரி மாதம் தானாக முன்வந்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். கோஹ்லி தலைமையிலான இந்திய அணியில் சாதாரண வீரராக விளையாடி வருகிறார். அதனை தொடர்ந்து ஐ.பி.எல் தொடரிலும் கேப்டன் பதவி பறிக்கப்பட்டதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான புனே அணியில் விளையாடி வருகிறார்.

இதிலும் தோனி சரியாக விளையாடாததால் பலரும் தோனி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இருந்தாலும் தோனியின் சாதனைகளை மறக்காத அவரது தீவிர ரசிகர்கள் தோனிக்கு ஆதரவாகவே குரல் கொடுத்து வருகின்றனர்.

இதற்கு ஒரு சான்றாக  சமூக வலைதளங்களில் அதிகம் விவாதத்திக்கப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் தோனி முதலிடத்தில் உள்ளார். தோனி பெயரில் பதிவிடப்பட்ட ஹேஷ்டேக்குகள் மில்லியனைத் தாண்டியுள்ளதாம். அதற்கு அடுத்தபடியாக காம்பீர் 2வது இடத்தையும், கோஹ்லி 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.