fbpx
Connect with us

தோனியின் முதல் கிரஷ் யார் தெரியுமா? ஆனா சாக்‌ஷி கிட்ட சொல்லக்கூடாது ஒகே!

News / செய்திகள்

தோனியின் முதல் கிரஷ் யார் தெரியுமா? ஆனா சாக்‌ஷி கிட்ட சொல்லக்கூடாது ஒகே!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, தனது முதல் கிரஷ் பற்றி முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.

Dhoni – Sakshi Dhoni – Ziva

கிரிக்கெட் உலகின் சக்சஸ்புல் கேப்டன்களுள் முக்கியமானவராக வலம்வருபவர் தோனி. ஐபிஎல்-லில் இவர் தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணி, அந்த தொடர் தொடங்கியதில் இருந்தே வெற்றிகரமான அணியாக வலம் வருகிறது. இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பின்னர் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் களமிறங்கிய சென்னை, மும்பையை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை ஆரம்பித்தது.

அதன் பின்னர், தற்போது 10 போட்டிகளில் 7 வெற்றிகள் மூலம் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் நீடிக்கிறது. இதனால், பிளே ஆஃப் சுற்றுக்கு எளிதில் தகுதி பெற்றுவிடும் என நம்பப்படுகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்டர் ஆஃப் அட்ராக்‌ஷன் நம்ம சென்னை சூப்பர்கிங்ஸ் அணிதான். போட்டிகளுக்கிடையிலான ஓய்வு நாட்களில் சென்னை வீரர்கள், தங்கள் ஸ்பான்சர்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுண்டு.
அந்தவகையில் கல்ஃப் ஆயில் நிறுவனத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் தோனி கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய தோனியிடம், உங்களது முதல் கிரஷ் யார் என்று ஆங்கர் கேட்டுவைத்தார். முதலில் இந்த கேள்வியை தோனி, தவிர்த்தாலும், பின்னர் அதற்கான பதிலை வெட்கத்துடன் சொன்னார். அந்த பெண்ணின் பெயரில் `A’ எத்தனையாவது எழுத்து உள்ளிட்ட பல்வேறு கேள்விகளைக் கேட்ட ஆங்கர், அந்த பெயரை சரியாகக் கண்டுபிடித்துச் சொன்னார். தோனி சொன்ன க்ளூக்களின் அடிப்படையில் அந்த பெண்ணின் பெயர் `Swati’ தானே என ஆங்கர் கேட்க, யெஸ்.

Dhoni

Dhonidhoni

அதுதான் சரியான விடை என தோனி சொல்ல, அரங்கமே அதிர்ந்தது. அந்தப் பெண்ணைக் கடைசியாகக் கடந்த 1999-ம் ஆண்டில் பார்த்ததாகவும், அப்போது அவர் 12-ம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்ததாகவும் தோனி நினைவுகூர்ந்தார். இதையெல்லாம் சொல்லிவிட்டு தோனி மற்றொரு வேண்டுகோளையும் வைத்தார். இந்த விஷயத்தை என்னுடைய மனைவியிடம் இப்போதைக்குச் சொல்லிவிடாதீர்கள் என்பதுதான் கேப்டன் கூல் வைத்த வேண்டுகோள்… அடிச்சுக்கூட கேப்பாங்க மக்களே… யாரும் இதை சாக்‌ஷிகிட்ட சொல்லிடாதீங்க… குறிப்பா அந்த வாலு ஜிவாகிட்ட மட்டும் சொல்லிடாதீங்க…

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top