fbpx
Connect with us

Cinemapettai

தோனியின் மின்னல்வேக ரன்னிங்: மிரண்டு போன ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வல்லுநர்கள்! (வீடியோ உள்ளே)

News | செய்திகள்

தோனியின் மின்னல்வேக ரன்னிங்: மிரண்டு போன ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வல்லுநர்கள்! (வீடியோ உள்ளே)

உலக கிரிக்கெட் வரலாற்றில் என்றும், எப்போதும் அதிவேகமாக ரன்னிங் ஓடும் டாப்-3 வீரர்கள் பட்டியலில், தோனியின் பெயர் நிச்சயம் இருக்கும். அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து தனது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார் தோனி.

குவஹாத்தியில் நடந்த இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி20 போட்டியின் போது, இந்திய அணிக்காக இரண்டு ரன்களை எடுக்க தோனி ஓடினார்.

dhoni

dhoni

அப்போது 22-யார்டு அளவு கொண்ட விக்கெட்டின் இடைவெளியில் 31 kmph வேகத்தில் தோனி ஓடியிருப்பதை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

மேலும், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் யோ-யோ டெஸ்ட்டிலும் தோனி அசத்தியிருக்கிறார். அதில், 20மீ நீளம் கொண்ட யார்டில், முதலாவது ரன்னை வெறும் 2.91 நொடிகளில் நிறைவு செய்த தோனி, மூன்றாவது ரன்னை 8.30 நொடிகளில் முடித்தார்.

36 வயதை நிறைவு செய்திருக்கும் தோனி, வயது என்பது தன்னை பொறுத்தவரை வெறும் எண்கள் மட்டுமே என்பதை நிரூபித்திருக்கிறார்.

சிலநேரங்களில் எம்எஸ் தோனி என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகின்ற மகேந்திரசிங் தோனி இந்திய துடுப்பாட்ட வீரரும் தற்போது இந்திய அணிக்கு ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கு தலைவராக இருப்பவரும் ஆவார்.

dhoni kholi

dhoni kholi

துவக்கத்தில் மிகுந்த ஆரவாரமான அதிரடியான மட்டையாளராக அறியப்பட்டிருந்த தோனி இந்திய ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கு தலைமையேற்றதிலிருந்து மென்மையான தலைவர்களுள் ஒருவராக குறிப்பிடப்படுகிறார்.

இவரது தலைமையின்கீழ் இந்தியா 2007 ஐசிசி டி20 உலகக்கோப்பை 2007-08ஆம் ஆண்டு சிபி தொடர் மற்றும் 2008இல் அவர்கள் 2க்கு 0 என்ற வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பார்டர்-கவாஸ்கர் டிராபி ஆகியவற்றை வென்றது.

dhoni

ஸ்ரீலங்காவிலும் நியூசிலாந்திலும் அவர்களது முதலாவது இரு அணி ஒருநாள் சர்வதேச தொடருக்கும் இவர் தலைமையேற்றார். 2008 மற்றும் 2009ஆம் ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் சர்வதேச போட்டிகள் விளையாட்டு வீரர் விருது (இந்த விருதைப் பெற்ற முதலாவது இந்திய விளையாட்டு வீரர்), ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் 2009ஆம் ஆண்டில் குடிமகனுக்கான மிக உயரிய நான்காவது கவுரமாக கருதப்படும் பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட பல விருதுகளையும் தோனி பெற்றிருக்கிறார்.

dhoni

2009ஆம் ஆண்டு நவம்பர்வரை ஐசிசி தரவரிசைப் பட்டியலில் தோனி அதிக மதிப்பெண் பெற்ற மட்டையாளராக இருக்கிறார். 2009ஆம் ஆண்டில் விஸ்டனின் முதலாவது கனவு டெஸ்ட் XI அணிக்கான தலைவராகவும் இடம்பெற்றிருக்கிறார்.

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையால் தொகுக்கப்பட்ட உலகின் முதல் 10 அதிக வருமானம் ஈட்டும் துடுப்பாட்ட வீரர்களில் மகேந்திர சிங் தோனி முதலாவதாக இருக்கிறார். தோனி தலைமையிலான இந்திய அணி 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பையை வென்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top