புனே: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், தல தோனி ரசிகர் ஒருவர், தயவு செய்து இன்றாவது சிறப்பாக விளையாடுங்கள் என்பது போன்ற பேனரை காட்டினார்.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர், 10வது ஆண்டாக வெற்றிகரமாக துவங்கி நடந்து வருகிறது. இதில் புனேவில் நடந்த 24வது லீக் போட்டியில், புனே, ஐதராபாத் அணிகள் மோதின.

இதில் ’டாஸ்’ வென்ற புனே அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். புனே அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் வாய்ப்பு பெற்றார். ஐதராபாத் அணியில் யுவராஜ் சிங் காயம் காரணமாக நீக்கப்பட்டு பிபுல் சர்மா அணியில் இடம் பிடித்தார்.

இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு, ஹென்ரிக்ஸ் (55*) அரைசதம் அடித்து கைகொடுக்க, ஐதராபாத் அணி, 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது. எட்டக்கூடிய இலக்கை துரத்திய புனே அணிக்கு ரகானே, ஸ்மித், ஸ்டோக்ஸ், என முன்னணி நட்சத்திரங்கள் சொதப்பினர்.

இதையடுத்து தோனி களமிறங்கி முதல் ரன் எடுத்த போது, மைதானத்தில் அமர்ந்திருந்த தோனியின் ரசிகர் ஒருவர், பேனர் ஒன்றை காட்டினார். அதில், நான் உங்கள் விளையாட்டை காண வகுப்பை பங்க் அடித்து வந்துள்ளேன். தயவு செய்து அதைவீணாக்கிடாதீங்க தோனி என அதில் எழுதப்பட்டிருந்தது.