Connect with us
Cinemapettai

Cinemapettai

Sports | விளையாட்டு

மைதானத்தின் உள்ளே நுழைந்த ரசிகர். சிக்காமல் சிட்டாய் ஓட்டம் எடுத்த தோனி. இறுதியில் என்ன ஆனது தெரியுமா ? வைரல் வீடியோ .

மைதானத்தின் உள்ளே நுழைந்த ரசிகருக்குப் போக்குக்காட்டிய தோனி .

இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு என்று பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. தங்கள் அபிமான நட்சத்திரத்தை பார்த்துவிட மாட்டோமா, செலஃபீ எடுக்க இயலுமா, தொட்டு விட முடியுமா என்று ஏங்குவோர் பலர் உண்டு.

நாம் பார்க்க இருக்கும் சுவாரஸ்ய சம்பவம் நேற்று நாக்பூர் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டியின் பொழுது நிகழ்ந்தது.

பாதுகாப்புகளை தாண்டி மைதானத்தில் நுழைந்து ஒருவர் வீரர்களை நோக்கி ஓடி வந்தார். தோனியை நோக்கி அவர் வருவதை உணர்ந்த தோனி ஓட்டம் எடுக்க ஆரம்பித்தார், நழுவி ஓடினார். தொடர்ந்து ரசிகர் துரத்த, ஸ்டம்புக்கு அருகில் சென்று சிரித்தபடி நின்றார். கிட்டே வந்த ரசிகர் தோனியிடம் ஆசி பெற்று வணங்கி பின் கட்டியணைத்தார்.

இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை வைத்து பல மீம்ஸ் ரெடி செய்தும் அசத்தி வருகின்றனர் நெட்டிசன்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top