ஐ.பி.எல் தொடருக்காக ராஞ்சியில் தான் புதிதாக கட்டியுள்ள புதிய வீட்டின் கிரேக பிரேவசத்திற்கு கூட செல்லாமல் தனது சின்சியாரிட்டியை நிரூபித்துள்ளார் தோனி.

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டனாக திகழ்ந்த தோனி கடந்த ஜனவரி மாதம் தானாக முன்வந்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். கோஹ்லி தலைமையிலான இந்திய அணியில் சாதாரண வீரராக விளையாடி வருகிறார். அதனை தொடர்ந்து ஐ.பி.எல் தொடரிலும் கேப்டன் பதவி பறிக்கப்பட்டதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான புனே அணியில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில், தோனி தனது வீட்டை காலி செய்து, புது வீட்டுக்கு, தனது குடும்பத்தாருடன் சென்றுள்ளார். ஆனால், தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் புனே அணிக்காக விளையாடுவதால், அவரால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை.

அதிகம் படித்தவை:  வட சென்னை படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர் தான் தெரியுமா.?

அக்‌ஷய திருதியை அன்று, நடந்த புதுமனை புகு விழாவின் துவக்கத்தில் தோனியின் தந்தை பான் சிங் தோனி, தாய் தேவகி, மனைவி ஷாக்சி, மற்றும் அவரது மகள் ஜிவா பங்கேற்றுள்ளனர். அந்த சமயத்தில் பெங்களூர் அணியுடனான போட்டி இருந்ததால் தோனியால் புது மனை புகு விழாவில் பங்கேற்க முடியவில்லையாம், விழா முடிந்த பிறகு அங்கு சென்று தனது குடும்பத்தினருடன் சிறிது நேரம் செலவிட்ட தோனி  மீண்டும் அணிக்கு திரும்பிவிட்டாராம்.

அதிகம் படித்தவை:  ஊட்டியில் அணை கட்ட வேண்டும்.. தமிழகத்தில் வலுக்கும் கோரிக்கை.. கர்நாடகா அதிர்ச்சி..

தோனியின் சாதனைகளை மறந்து அவரை  இழிவுபடுத்தும் விதமாக  சர்ச்சை கருத்துகளை  தொடர்ந்து தெரிவித்து  வந்த புனே அணி நிர்வாகத்திற்கும், தனக்கு எதிராக கருத்து தெரிவித்தவர்களுக்கும் ‘தல’ தோனி, தனது சின்சியாரிட்டி மூலம் நல்ல செருப்படி கொடுத்துள்ளதாக ரசிகர்கள் தோனிக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.