12 வருடங்களுக்குப் முன் தோனி செய்த அநீதியை போட்டுடைத்த சேவாக்.. காப்பாற்றி தூக்கிவிட்ட சச்சின்

வீரேந்திர சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இவர்கள் இருவரும் இந்திய அணியில் முதலாவதாக களம் கண்டாலே மற்ற அணி வீரர்களுக்கு ஒரு திகில் சூழ்நிலை இருக்கும். தலைசிறந்த பந்துவீச்சாளர்கள் ஆகிய மெக்ராத், சோயிப் அக்தர், பிரட் லீ, போன்ற பவுலர்களை துவம்சம் செய்யக்கூடிய திறமை படைத்தவர்கள் இவ்விரு வீரர்கள்.

இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்ட சௌரவ் கங்குலி ஓய்வுக்குப்பின்  அணியின் கேப்டன் பதவியில் நிறைய பேர் வருவதும் போவதுமாக இருந்தனர். அதன்பின் கேப்டன் பொறுப்பை ஏற்று இந்திய அணியை வெற்றிகரமாக வழி நடத்தியவர் மகேந்திர சிங் தோனி.

இவரின் வருகைக்குப் பின் சீனியர் வீரர்களை கொஞ்சம் புறக்கணித்தார் என்றே கூறலாம். அதில் முக்கியமானவர் விரேந்திர சேவாக். இவர் ஒரு கடினமான காலகட்டத்தில் இருந்து வந்தார். சில போட்டிகளில் சரியாக விளையாடாமல் மோசமான ஆட்ட திறனை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் விரேந்திர சேவாக் தனக்கு நடந்த ஒரு மோசமான அனுபவத்தை பற்றி 12 வருடங்களுக்கு பின் தற்போது வெளியில்  சொல்லியுள்ளார். 2008 ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் தனக்கு நடந்த ஒரு அநீதியை விளக்கியுள்ளார்.

அந்த ஆஸ்திரேலிய தொடரில் சேவாக் முதல் நான்கு ஆட்டங்களில் 6, 33, 11, 14 என்று ரன்கள் எடுக்க திணறி வந்துள்ளார். இதனால் கேப்டன் மகேந்திர சிங் தோனி வீரேந்திர சேவாக்கை விளையாடும் அணியிலிருந்து நீக்கி விட்டாராம். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட விரேந்திர சேவாக் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை எடுக்கப் போவதாகச் சச்சினிடம் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவைக் கேட்ட சச்சின், விரேந்திர சேவாக்கை தேற்றியுள்ளார். இது உங்களுக்கு கடினமான காலக்கட்டம். எல்லோருக்கும் இத்தகைய கடின காலம் வருவது இயல்பு. பொறுமையாக இருங்கள் சரியாகும் என்று சேவாக் இடம் கூறியுள்ளார். அதன்பின் பொறுமையாக இருந்து அந்தச் சரிவில் இருந்து மீண்டு வந்ததாக தற்போது சேவாக் தெரிவித்துள்ளார்.

Next Story

- Advertisement -