Connect with us
Cinemapettai

Cinemapettai

dhoni

Sports | விளையாட்டு

பணத்தால எல்லாரையும் விலைக்கு வாங்க முடியாது.. தோனி எடுத்த முடிவு! பீதியில் கதறும் கார்ப்பரேட்டுகள்

மகேந்திர சிங் தோனி – இவரது பேட்டிங், விக்கெட் கீப்பிங் என்ற இவ்விரண்டிற்கும் மேலாக ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படுவது இவரின் சாந்தமான, கூலான மனநிலை தான் என்றால் அது மிகையாகாது. வெற்றி என்றால் வானத்தின் உச்சிக்கு செல்வது, தோல்வி எனில் அதலபாதாளத்துக்கு செல்பவர்கள் மத்தியில் இவர் வித்தியாசமானவர்.

தோனி கிரிக்கெட் விளையாடி சுமார் ஒரு வருடம் ஆகிறது. உலகக் கோப்பை முடிந்த உடன் மிலிட்டரி சென்றார். ஐபிஎல் ஆடுவார் என அனைவரும் எதிர்பார்த்த சூழலில் கோரோனாவின் காரணத்தால் அதுவும் நடக்காமல் போனது. சமீபத்தில் விவசாயம் செய்தபடி இவர் ட்ராக்டர் ஒட்டிய வீடியோ இணையத்தில் வைரலானது .

இந்நிலையில் தோனி எடுத்த முடிவை பற்றி அவரது மேனேஜர் மிர் திவாகர் பின்வருமாறு கூறியுள்ளார்;

“நாட்டுப்பற்று என்பது அவரது ரத்தத்தில் உள்ளது. மிலிட்டரியில் இருப்பதாகட்டும் அல்லது விவசாயமாக இருக்கட்டும், எதுவாயினும் அதனை அவர் முழு மனதுடன் தான் செய்வார். தனது 40- 50 ஏக்கர் விளை நிலத்தில் ஆர்கானிக் முறையில் பப்பாளி, வாழை போன்றவற்றை பயிரிட்டு வருகிறார்.

மேலும் கோரானாவின் தாக்கம் முடிந்தது, வாழ்க்கை சமநிலைக்கு திரும்பும்வரை எந்த ஒரு பெரிய பிராண்டை ஆதரிக்கப் போவதில்லை மற்றும் விளம்பரப் படங்களில் தான் நடிக்கப் போவதில்லை என அவர் முடிவு செய்துள்ளார்.” என்ற தகவலை பகிர்ந்துள்ளார்.

சச்சின், தோனி, கோலி ஆகியோர் கிரிக்கெட் விளையாடி சம்பாதிப்பதை விட விளம்பரங்கள் வாயிலாக பல கோடிகளை குவித்து வருபவர்கள். இவ்வாறு தோனி எடுத்த முடிவு அவரின் ரசிகர்கள் பலருக்கு ஆச்சரியத்தை தந்துள்ளது. மேலும் பல கார்ப்ரேட் ஆசாமிகள் அடுத்த விளம்பர மாடல் யார் என யோசிக்க ஆரம்பித்துவிட்டனர்.

Continue Reading
To Top