கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படமாக ‘எம்.எஸ்.தோனி: தி அண்டோல்டு ஸ்டாரி’ என்ற படம் வெளியானது. இந்தப் படத்தில் கதாநாயகனாக பாலிவுட் நடிகர் சுஷாந்த சிங் ராஜ்புட் நடித்து இருந்தார். அப்படியே அச்சு அசலாக தோனி போன்ற உடல்மொழியை வெளிப்படுத்தி நடித்து இருந்த அவருக்கு ஏராளமான பாராட்டுகள் குவிந்தது.

இவர் கதாநாயகனாக அறிமுகமாவதற்கு முன்பு ஏராளமான டிவி நிகழ்ச்சிகளில் தோன்றி இருக்கிறார். அப்போது பிரபல நடன நிகழ்ச்சி ஒன்றில் டிவி நடிகை அங்கிதா லோகாந்டே என்பவருடன் இணைந்து நடனமாடியுள்ளார்.

சுஷாந்த் சிங், அங்கிதா ஆகிய இருவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுதான் பிரபலமானார்கள். நிகழ்ச்சியின்போது இருவருக்கும் காதல் பற்றிக்கொள்ள கொஞ்ச காலம் டேட்டிங்கில் ஈடுபட்டனர்.

அதிகம் படித்தவை:  கண்ணாடியில் கையை முறுக்கிக்கொண்டு குத்தும் மகத்.! பிக்பாஸ் ப்ரோமோ வீடியோ.!

இதன் பின்னர் சுஷாந்த பாலிவுட்டில் ஹீரோவாக மாறினார். அங்கிதா டிவி நடிகையாக பல தொடர்களில் நடித்தார்.

இந்த நிலையில், இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதைத் தொடர்ந்து பிரிந்தனர். அங்கிதாவை பிரிந்த பின்பு தனது சமூக வலைத்தளப் பக்கத்தையும் நீக்கினார் சுஷாந்த்.

இதைத் தொடர்ந்து தற்போது ‘ராப்டா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் சுஷாந்த். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்த சனோன் நடிக்கிறார். தற்போது மீண்டும் தனது சமூக வலைத்தளப்பக்கத்தை புதுப்பித்துள்ள சுஷாந்த், கீர்த்தி சனோனுடனான நெருக்கமான புகைப்படங்களையும், விடியோக்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

அதிகம் படித்தவை:  கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக லைகா நிறுவனம் கொடுத்த தொகை இவ்வளவா.!

இதனிடையே இருவரும் அடிக்கடி ஒன்றாக வெளியே சுற்றுவதாகவும், அவர்களுக்கு காதல் மலர்ந்துள்ளதாகவும் பாலிவுட் ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகின்றன.

இது ஒரு புறம் இருக்க தனது பழைய காதலியான அங்கிதாவுடன் காபி அருந்தியவாறு காணப்பட்டார் என மும்பையைச் சேர்ந்த பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இருவரும் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்த மிகவும் நீண்ட நேரம் உரையாடியதாகவும், ஒருவருக்கொருவர் உருக்கமாகப் பார்த்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து சுஷாந்த தற்போது புதிய ஜோடியான கீர்த்தியுடன் சேருவாரா அல்லது பழைய காதலி அங்கிதாவுடன் மீண்டும் காதலை புதுப்பித்துக் கொள்வாரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.