dhoni_cinemapettai

2007-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய மகேந்திர சிங் தோனி, பேட்டிங்கிலும் விக்கெட் கீப்பிங்கிலும் தனி முத்திரை பதித்தார்.

பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் தனக்கென தனி பாணியை பின்பற்றி கிரிக்கெட்டில் உச்சம் தொட்டவர்.

dhoni
dhoni

கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, தோனியின் கேப்டன்சியில் 2007-ல் டி20 உலகக்கோப்பை, 2011-ல் ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 2013-ல் சாம்பியன்ஸ் டிராபி என அனைத்து வகையான கோப்பைகளையும் இந்திய அணிக்கு பெற்றுத்தந்த பெருமைக்குரியவர்.

கடந்த 2014-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற தோனி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். இதையடுத்து விராட் கோஹ்லி இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

அதிகம் படித்தவை:  தமிழக சிங்கம் அஸ்வின் அவுட்.! கொதிக்கும் ரசிகர்கள்!
dhoni-kohli

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கூல் தோனி ஐசிசி-ன் மூன்று வித கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். தற்போது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி சக வீரராக விளையாடி வருகிறார்.

ஆனால், டி20 போட்டிகளில் அவர் எதற்கு என்று கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் கவலை படாத தோனி, எப்போதும் போல மிகவும் கூலாகவே தனது வேலையில் ஈடுபாடு கொண்டு செய்து வருகிறார்.

இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் தோனி நடனம் ஆடும் வீடியோ ஒன்று வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அந்த வீடியோவில், தனது மனைவி சாக்ஷி முன்பு, 2012ம் ஆண்டு வெளிவந்த ‘டேஸி பாய்ஸ்’ படத்தில் வரும் ‘ஜஹாக் மார் கே’ என்ற பாடலுக்கு அவர் ஆட, அதை கண்டு சாக்ஷி சிரித்துக் கொண்டிருப்பது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

அதிகம் படித்தவை:  தோனி இந்திய பிரதமராக வேண்டும்: யாருக்கு இந்த ஆசை தெரியுமா?

இதனை ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனன்ர். இந்த வீடியோ எப்போது எடுத்தது என்பது குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், வீடியோ பார்க்கையில் தோனியின் சிறு பிள்ளைத்தனம் மகிழ்ச்சியை கொடுக்கிறது.

தோனி இங்கு மட்டுமில்லாமல், களத்தில், ட்ரெஸ்ஸிங் ரூம், விளம்பரங்கள், ஐபிஎல் ப்ரோமோக்களிலும் தனது நடன திறமையை காட்டியிருக்கிறார்.