Tamil Cinema News | சினிமா செய்திகள்
சினிமாவில் களம் இறங்கிய தோனி.. முதல் படமே இந்த மாதிரி கதையா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
கிரிக்கெட் வீரர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் பலரும் அதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.
ஆனால் ஒருசில கிரிக்கெட் வீரர்கள் சினிமாவில் ஆர்வம் கொண்டு சில பல படங்களில் நடிப்பார்கள். அந்த வகையில் ஸ்ரீசாந்த் என்ற வேகப்பந்து வீச்சாளர் கேரள சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
விராட் கோலியும் கிரிக்கெட்டுக்கு பிறகு சினிமாவில் நடிக்க வாய்ப்பு இருக்கிறது என இப்போதே பல பேச்சுகள் எழுந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சமீபத்தில் இன்டர்நேஷனல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்ட தோனி அடுத்ததாக சினிமாவில் களமிறங்க உள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளது.

dhoni-cinemapettai
ஆனால் நடிகராக இல்லாமல் தனது மனைவி சாக்ஷி உடன் சேர்ந்து ஒரு டைம் ஃபிக்ஷன் கதையை தயாரிக்க உள்ளாராம்.
ஐபிஎல் முடிந்ததும் அதற்கான வேலைகளில் தோனி இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தோனி பெயரில் அவரது வாழ்க்கை வரலாறு படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
தோனி தயாரிக்கும் சயின்ஸ் பிக்ஷன் படம் அமேசான் நெட்ப்ளிக்ஸ் போன்ற ஒடிடி தளங்களில் வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறதாம்.
